Netaji Subhas Chandra Bose's ideals and unwavering dedication to India's freedom continue to inspire us: PM

அன்பான சகோதரர்களே, மகத்தான வீரத்தின் நாளில் வாழ்த்துக்கள்!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது. நேதாஜி சுபாஷ் பாபுவுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த ஆண்டு பராக்ரம தினம் பிரமாண்டமான கொண்டாட்டம் நேதாஜி பிறந்த இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஒடிசா மக்களுக்கும், ஒடிசா அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பிரமாண்ட கண்காட்சியும் கட்டாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில், நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பல பாரம்பரியங்கள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல ஓவியர்கள் நேதாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளை  வரைந்துள்ளனர். இவை அனைத்தையும் சேர்த்து நேதாஜியின் அடிப்படையிலான பல புத்தகங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் எனது இளம் இந்தியா, எனது இந்தியாவுக்கு ஒரு புதிய ஆற்றலைத் தரும்.
நண்பர்களே,
இன்று, நம் நாடு வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதில் ஈடுபட்டிருக்கும் போது, நேதாஜி சுபாஷின் வாழ்க்கையிலிருந்து நாம் தொடர்ந்து உத்வேகம் பெறுகிறோம். நேதாஜியின் வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோள் - ஆசாத் ஹிந்த். அவரது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் தனது முடிவை ஒரே ஒரு அளவுகோலில் சோதித்தார் . நேதாஜி ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார், அவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் விரும்பினால், ஆங்கிலேயர் ஆட்சியில் மூத்த அதிகாரியாகி நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம், ஆனால் சுதந்திரத்திற்காக, அவர் கஷ்டங்களைத் தேர்ந்தெடுத்தார், சவால்களைத் தேர்ந்தெடுத்தார், நாடு மற்றும் வெளிநாடுகளில் அலைவதை விரும்பினார், நேதாஜி சுபாஷ் ஆறுதல் மண்டலத்திற்குக் கட்டுப்படவில்லை. . அதேபோன்று, இன்று நாம் அனைவரும் நமது ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறி வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். நாம் உலகளவில் நம்மை சிறந்தவர்களாக மாற்ற வேண்டும், சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும், செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.
 

நண்பர்களே,
நேதாஜி நாட்டின் சுதந்திரத்திற்காக ஆசாத் ஹிந்த் ஃபவுஜை உருவாக்கினார், அதில் நாட்டின் ஒவ்வொரு பகுதி மற்றும் வகுப்பைச் சேர்ந்த துணிச்சலான ஆண்களும் பெண்களும் அடங்குவர். ஒவ்வொருவரின் மொழிகளும் வித்தியாசமாக இருந்தன, ஆனால் உணர்வு ஒன்று - நாட்டின் சுதந்திரம். இந்த ஒற்றுமை இன்று வளர்ந்த இந்தியாவிற்கு ஒரு சிறந்த பாடம். அன்று ஸ்வராஜ்ஜியத்துக்காக ஒன்றுபட வேண்டிய நாம் இன்று வளர்ந்த இந்தியாவுக்காக ஒன்றுபட வேண்டும். இன்று, நாடு மற்றும் உலகம் முழுவதும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாதகமான சூழல் உள்ளது. இந்த 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் நூற்றாண்டை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதைப் பார்க்க உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது, இதுபோன்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில், நேதாஜி சுபாஷின் உத்வேகத்துடன் இந்தியாவின் ஒற்றுமையை நாம் வலியுறுத்த வேண்டும். நாட்டை பலவீனப்படுத்த நினைப்பவர்கள், நாட்டின் ஒற்றுமையை உடைக்க நினைப்பவர்கள் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,
நேதாஜி சுபாஸ் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். அவர் அடிக்கடி இந்தியாவின் வளமான ஜனநாயக வரலாற்றைப் பற்றி விவாதித்தார் மற்றும் அதிலிருந்து உத்வேகம் பெற வாதிட்டார். இன்று இந்தியா அடிமை மனநிலையில் இருந்து வெளியே வருகிறது. அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் அதே வேளையில் அது வளர்ந்து வருகிறது. ஆசாத் ஹிந்த் அரசு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அந்த வரலாற்று நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. நேதாஜியின் பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று, நேதாஜி சுபாஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தை எங்கள் அரசு 2019 -இல் தில்லியின் செங்கோட்டையில் கட்டியது. சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதுகள் அதே ஆண்டில் தொடங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், நேதாஜியின் பிறந்தநாளை இப்போது பராக்கிரம தினம் என்று கொண்டாட அரசு முடிவு செய்தது. இந்தியா கேட் அருகே நேதாஜியின் பிரமாண்ட சிலையை நிறுவுவது, அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜியின் பெயரை சூட்டுவது, குடியரசு தின அணிவகுப்பில் ஐஎன்ஏ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது போன்றவை அரசின் இந்த உணர்வின் அடையாளமாகும்.

 

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், விரைவான வளர்ச்சியானது சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் ராணுவ வலிமையையும் அதிகரிக்கிறது என்பதை நாடு காட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர், இது மிகப்பெரிய வெற்றியாகும். இன்று கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் நவீன உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன, இதனுடன் இந்திய ராணுவத்தின் பலமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இன்று உலக அரங்கில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது, இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேதாஜி சுபாஷால் ஈர்க்கப்பட்ட ஒரே குறிக்கோளுடன் வளர்ந்த இந்தியாவுக்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும், இதுவே நேதாஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள், நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic

Media Coverage

Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Gujarat meets Prime Minister
December 19, 2025

The Chief Minister of Gujarat, Shri Bhupendra Patel met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Gujarat, Shri @Bhupendrapbjp met Prime Minister @narendramodi.

@CMOGuj”