நமது கூட்டான சாதனைகளின் உண்மையான கொண்டாட்டம் என்ற முறையில் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் நாட்டிற்கு பெருமைமிகு தருணமாக விளங்குகிறது: பிரதமர்
இந்தியாவின் ராணுவ வல்லமையை ஆபரேஷன் சிந்தூரில் உலகம் பார்த்தது; பயங்கரவாதத்தின் மூளைகளாக இருந்தவர்களின் மறைவிடங்களை அழித்து இந்திய வீரர்கள் தங்கள் நோக்கத்தில் 100% வெற்றியை ஈட்டினர்: பிரதமர்
பயங்கரவாதமாக இருந்தாலும் நக்சலிசமாக இருந்தாலும் பல கடுமையான சவால்களை இந்தியா எதிர்கொண்டிருந்தது, ஆனால் இன்று நக்சலிசம் மற்றும் மாவோயிசத்தின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது; வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் அரசியல் சட்டம் நிராகரிக்கிறது. கடந்த காலத்தில் சிவப்புத் தடங்களாக இருந்தவை இன்று வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் பசுமை மண்டலங்களாக மாறியுள்ளன: பிரதமர்
டிஜிட்டல் இந்தியா உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது, பல நாடுகளில் யுபிஐ பிரபலமாகியுள்ள நிலையில் நிதித் தொழில்நுட்ப உலகில் அங்கீகரிக்கப்பட்ட பெயராக அது மாறியுள்ளது: பிரதமர்
பகல்ஹாமில் நடந்த கொடூரப் படுகொலை ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பயங்காரவாதம் மற்றும் அதன் குவிமையத்தின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது; கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்தியா முழுவதும் உள்ள பிரதிநிதிகள் ஒன்றுபட்டு இத்தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை அம்பலப்படுத்தினர்: பிரதமர்
இந்த அதிகரிப்பு வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்

வணக்கம் நண்பர்களே!

மழைக்கால கூட்டத் தொடரில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.

 

நண்பர்களே,

இந்த மழைக்கால கூட்டத் தொடர் நாட்டிற்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயமாகும். இத்தொடர் நாட்டின் வெற்றியை கொண்டாடுவதாக அமைந்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் முறையாக இந்திய மூவண்ணக்கொடி பறக்கவிடப்பட்டிருப்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கக் கூடிய தருணமாகும். மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட நாடாளுமன்ற மற்றும் நாட்டின் குடிமக்கள் இந்த வெற்றியை ஒருமித்த குரலில் கொண்டாடுவதற்கு இணைவார்கள்.

நண்பர்களே,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படையினர் தங்களது நோக்கங்களில் நூறு சதவீத வெற்றியைக் கண்டனர். வெறும் 22 நிமிடங்களில் எதிரியின் பிரதேசத்தில் தனது இலக்குகளை அடைந்து இந்த போர் நடவடிக்கை அவற்றை சிதைத்து அழித்தது.

நண்பர்களே,

ஒரு காலத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் நக்சல் ஆதிக்கத்தில் இருந்த நிலையில் தற்போது அங்கெல்லாம் சுதந்திர காற்று சுவாசிக்கப்படுகிறது என்று என்னால் பெருமையுடன் கூறமுடியும். நமது அரசியல் சாசனம் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை வெற்றிகொண்டுள்ளது.

 

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகப் பொருளாதார நாடுகளின் தரவரிசையில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம். தற்போது உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறுகிறது. 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பல்வேறு சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.

நண்பர்களே,

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமானவர்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். அதே போல் மழைக்காலங்களில் பரவும் கண்நோயான ட்ராகோமா, இந்தியாவில் கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

 

நண்பர்களே,

பஹல்காமில் நிகழ்ந்த கொடூரமான படுகொலைத்தாக்குதல் உலகை அதிர்ச்சியடையச் செய்தது. பயங்கரவாதம் மற்றும் அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி செய்வோர் குறித்து உலகின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் சேவைக்காக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளக்கினார்கள். நாட்டின் நலன் கருதி இந்த முக்கிய பணியில் ஈடுபட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை பாராட்டுகிறேன். அவர்களுடைய முயற்சிகள் நாட்டிற்கு நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளன‌. பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை சர்வதேச சமுதாயத்தின் மனதை விழிப்படைய செய்தது. நாட்டின் நலனுக்காக இந்த சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் பாராட்டுவது எனது பாக்கியம் என்று நான் கருதுகிறேன்.  அர்த்தமுடைய ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Science and the power of jan bhagidari can lead to a TB-free India

Media Coverage

Science and the power of jan bhagidari can lead to a TB-free India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam, seeks blessings of Maa Katyayani and shares devotional recital
March 24, 2026

The Prime Minister, Shri Narendra Modi, sought the blessings of Maa Katyayani and said that worship of Maa Jagadambe fills the mind with infinite energy and inner strength, while her divine radiance illuminates the heart with higher consciousness. He prayed that with the blessings of the Goddess, who is the embodiment of divinity and valour, all her devotees are endowed with immense strength and self-confidence.

The Prime Minister shared a Sanskrit verse-

“चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना। कात्यायनी शुभं दद्याद् देवी दानवघातिनी॥”

The Prime Minister also shared a recital in praise of the Goddess.

The Prime Minister wrote on X;

“मां कात्यायनी को वंदन! दिव्यता और पराक्रम की अधिष्ठात्री देवी मां की कृपा से उनके सभी भक्तों में अपार शक्ति और आत्मविश्वास का संचार हो।

चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना।

कात्यायनी शुभं दद्याद् देवी दानवघातिनी॥”

“मां जगदम्बे की उपासना से मन अनंत ऊर्जा और आत्मबल से भर जाता है। देवी मां का अलौकिक ओज हृदय को दिव्य चेतना से आलोकित कर देता है।