பகிர்ந்து
 
Comments
மாநில மக்களின் ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு
“இரட்டை எஞ்சின் அரசின் இடைவிடாத முயற்சியால் வாய்ப்புகளின் பூமியாக திரிபுரா மாறி வருகிறது”
"இணைப்பு உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதன் மூலம், வர்த்தக வழித்தடத்தின் மையமாக மாநிலம் வேகமாக மாறி வருகிறது"

திரிபுராவின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த மக்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரட்டை எஞ்சின் அரசின் இடைவிடாத முயற்சியின் கீழ் வாய்ப்புகளின் பூமியாக திரிபுரா மாறி வருகிறது. வளர்ச்சியின் அளவுகோல்கள் பலவற்றில் மாநிலம் மிகவும் சிறப்பான செயல்திறனைப் பெற்றுள்ளது. இணைப்பு உள்கட்டமைப்பின் கட்டுமானத்தின் மூலம், வர்த்தக வழித்தடத்தின் மையமாக மாநிலம் வேகமாக மாறி வருகிறது.. இன்று சாலை, ரயில், விமான மற்றும் நீர் வழிகள் திரிபுராவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. இரட்டை எஞ்சின் அரசு திரிபுராவின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் கடல் துறைமுகத்துடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டில் அகௌரா ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மூலம் வங்கதேசத்தில் இருந்து முதல் சரக்குகளை மாநிலம் பெற்றது. மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் சமீபத்திய விரிவாக்கமும் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்.

நண்பர்களே, ஏழைகளுக்கு நல்ல வீடுகள் வழங்குவது மற்றும் வீட்டுக் கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக மாநிலத்தில் சிறப்பான பணியாற்றி வருகிறது. இந்த கலங்கரை விளக்கத் திட்டங்கள் ஆறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன, அவற்றில் திரிபுராவும் ஒன்று. கடந்த மூன்று ஆண்டுகளின் பணிகள் ஒரு ஆரம்பம் தான். திரிபுராவின் உண்மையான திறன் இன்னும் உணரப்படவில்லை. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை முதல் உள்கட்டமைப்பு மேம்பாடு வரையிலான நடவடிக்கைகள், பல தசாப்தங்களுக்கு மாநிலத்தை தயார்படுத்தும். அனைத்து கிராமங்களிலும் அரசு நலத் திட்டப் பயன்கள் மற்றும் வசதிகளை முழு அளவில் செய்வது போன்ற நடவடிக்கைகள் திரிபுரா மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றும்.

இந்தியா 100-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போது, திரிபுரா மாநில அந்தஸ்து பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்யும். புதிய தீர்மானங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான சிறந்த காலம் இது. நமது கடமைகளை நிறைவேற்றி, அமைதியையும், வளர்ச்சியையும் பராமரிக்க உறுதி எடுத்துக் கொள்வோம்.நன்றி!

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Budget 2023: Perfect balance between short and long term

Media Coverage

Budget 2023: Perfect balance between short and long term
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 2 பிப்ரவரி 2023
February 02, 2023
பகிர்ந்து
 
Comments

Citizens Celebrate India's Dynamic Growth With PM Modi's Visionary Leadership