பகிர்ந்து
 
Comments
India is now ready for business. In the last four years, we have jumped 65 places of global ranking of ease of doing business: PM Modi
The implementation of GST and other measures of simplification of taxes have reduced transaction costs and made processes efficient: PM
At 7.3%, the average GDP growth over the entire term of our Government, has been the highest for any Indian Government since 1991: PM Modi

மாண்புமிகு அமைச்சர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள  மேதகமையாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பங்காளர் நாடுகளின் தூதுக் குழுவினர்கள், கார்ப்பரேட் தலைவர்கள், அழைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் குழுவினர், மேடையில் உள்ள மரியாதைக்குரியவர்கள், இளம் நண்பர்கள், பெரியோர்களே தாய்மார்களே!

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 9வது நிகழ்வுக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் காண்பதைப் போல, இந்த உச்சிமாநாடு உண்மையிலேயே உலகளாவிய நிகழ்வாக அமைந்துள்ளது. அனைவருக்கும் இடம் அளிக்கும் ஓர் இடமாக உருவாகியுள்ளது. மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ள பெருமை இந்த நிகழ்வுக்குக் கிடைத்திருக்கிறது. தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவன தலைவர்களின் பங்கேற்பால் இந்த மாநாட்டிற்கு உத்வேகம் கிடைத்துள்ளது. ஏராளமான நிறுவனங்கள், கருத்துருவாக்கம் செய்வோர்கள் இளம் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் செயல் ஊக்கத்தைக் கொண்டிருக்கிறது.

நமது தொழில்முனைவோருக்கு நம்பிக்கையை உருவாக்குவதில் துடிப்புமிக்க குஜராத் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. திறன் வளர்ப்பு மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கு அரசு நிறுவனங்கள் உதவி செய்வதாக இது அமைந்துள்ளது.

உங்கள் அனைவருக்கும் இது ஆக்கபூர்வமான, பலன் தரக் கூடிய, மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மாநிலத்தில் இது பட்டம் விடும் திருவிழா அல்லது உத்தராயண காலமாக இருக்கிறது. இந்த பரபரப்பான உச்சிமாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு இடையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், திருவிழா கால நிகழ்வுகளான வாண வேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும்  காண்பதற்கு உங்களுக்கு அவகாசம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

துடிப்புமிக்க குஜராத் நிகழ்வில் பங்கேற்பு நாடுகளாக உள்ள 15 நாடுகளுக்கும் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 பங்கேற்பு நிறுவனங்கள், கருத்தரங்குகள் நடத்தும் அமைப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் பங்கேற்ற நாடுகள் ஆகிய அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலமாக தங்களுடைய மாநிலங்களில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை காட்சிப்படுத்துவதற்கு, இதைப் பயன்படுத்திக் கொள்ள எட்டு இந்திய மாநிலங்கள் முன்வந்திருப்பது திருப்தி தருவதாக உள்ளது.

பிரம்மாண்டமான அளவில், உலகத் தரம் வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் நிறைந்த, செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுவதுமான, தொழில்நுட்பங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதுமான உலக வர்த்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். உண்மையில், இந்தியாவில் உள்ளதில், சிறந்த தொழில் செயலூக்கத்தைக் கொண்டதாக குஜராத் மாநிலம் இருக்கிறது. கடந்த பல தசாப்தங்களாக குஜராத் மாநிலத்தில் இருந்து வரும் தொழில் வாய்ப்புகளை மேலும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்வதற்கு இந்த நிகழ்வு உதவியாக அமைந்துள்ளது. வெற்றிகரமான எட்டு மாநாடுகளின் பரிணாம முன்னேற்றமாக துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு அமைந்துள்ளது.

பல்வேறு தலைப்புகளில் பல மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப் பட்டுள்ளன. இந்திய சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும், உலக அளவிலும் இந்த விஷயங்கள் முக்கியத்துவமானவையாக உள்ளன. உதாரணமாக, நாளை நடைபெறும் ஆப்பிரிக்க தின கொண்டாட்டம், 20 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச வர்த்தக சபைகளின உலகளாவிய மாநாடு ஆகியவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

நண்பர்களே,

கண்ணியமிக்கவர்கள் கூடியுள்ளதாக இன்றைய நிகழ்வு அமைந்திருக்கிறது. நிறைய அரசுகளின் தலைவர்கள், தனித்துவமிக்க தூதுக் குழுவினர் இங்கே வந்திருப்பது எங்களுக்கு மரியாதை அளிக்கும் செயலாக உள்ளது. சர்வதேச அளவில் இரு தரப்பு ஒத்துழைப்பு சந்திப்புகள் என்பது, நாடுகளின் தலைநகரங்களில் மட்டுமின்றி, எங்கள் மாநிலத் தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது.

பெரும்பாலான வளரும் பொருளாதார நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாவிலும் பரவலாகவும், உயர்ந்த நிலையிலும் வளர்ச்சி காண வேண்டும் என்பது தான் எங்களுக்கான சவாலாக உள்ளது.

பரவலாக என்பது, வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகள் மற்றும் சமுதாயங்களில் இதன் பலன்கள் கிடைக்கச் செய்வதாக இருக்கும்.

உயர்நிலையில் என்பது, வாழ்க்கைத் தரம், சேவைகளின் தரம், கட்டமைப்புகளின் தரம் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்தாக வேண்டும். இங்கே, இந்தியாவில் நாங்கள் எட்டும் சாதனைகள், மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு பேரிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

நண்பர்களே,

அடிக்கடி இந்தியாவுக்கு வருபவர்கள் இங்கே சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள். வளர்ச்சிப் பாதை மற்றும் அதன் தீவிரம் என இரு வகைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகாரத்தின் அளவைக் குறைத்து, நிர்வாகத்தின் அளவை மேம்படுத்துவதில் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. சீரமைப்பு, செயல்பாடு, மாற்றம் மற்றும் மேற்கொண்டு செயல்பாடு என்பது தான் எனது அரசின் தாரக மந்திரங்களாக உள்ளன.

தீவிரமான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாட்டுக்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அவ்வாறு செய்த காரணத்தால், உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாங்கள் நீடித்துக் கொண்டிருக்கிறோம். உலக வங்கி மற்றும் IMF போன்ற முக்கியமான சர்வதேச நிதி அமைப்புகளும், Moodys போன்ற ஏஜென்சிகளும், இந்தியப் பொருளாதாரத்தின் பயணத்தின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளன.

எங்களுடைய முழு திறனையும் எட்டுவதற்கு தடைக்கல்லாக இருக்கும் விஷயங்களை அகற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் வேகம் மற்றும் முனைப்பை நாங்கள் தொடர்வோம்.

நண்பர்களே,

முன் எப்போதையும்விட தொழில் செய்வதில் இந்தியா இப்போது தயாராக உள்ளது. தொழில் செய்வதை எளிமையாக்கி இருக்கிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில், உலக வங்கியின் தொழில் செய்தல் அறிக்கையில் உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் 65 இடங்கள் முன்னேறி இருக்கிறோம்.

2014-ல் 142வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும் எங்களுக்கு இன்னும் திருப்தி இல்லை. அடுத்த ஆண்டில் முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனது குழுவினரை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய விதிமுறைகளும், நடைமுறைகளும், உலக அளவில் சிறப்பாக உள்ளவற்றுடன் ஒப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தொழில் செய்வதை, குறைந்த செலவு பிடிக்கும் விஷயமாகவும் நாங்கள் மாற்றியுள்ளோம்.

வரலாற்று சிறப்புமிக்க வகையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலாக்கம், வரிகளை எளிமையாக்கல் மற்றும் ஒன்று சேர்த்தல் நடவடிக்கைகளால் பரிவர்த்தனை செலவுகள் குறைந்து, நடைமுறைகள் சிறப்பாக மாறியுள்ளன.

டிஜிட்டல் செயல்முறைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் ஒற்றைச்சாளர இடைமுகங்கள் மூலம், தொழில் செய்வதை வேகமானதாகவும் நாங்கள் மாற்றியிருக்கிறோம்.

அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில், அதிக அளவிலான வெளிப்படையானநாடுகளில் ஒன்றாக நாம் திகழ்கிறோம். நமது பொருளாதாரத்தில் உள்ளபெரும்பாலான துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டுக்கு மட்டுமே வாய்ப்புஅளிக்கப்படுகிறது. 90 சதவீதத்துக்கும் மேலான ஒப்புதல்கள், தானியங்கிமுறையில் வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள், நமது பொருளாதாரத்தைஉயர் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில், 263பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடுகளைஈர்த்துள்ளோம். இது கடந்த 18 ஆண்டுகளில் பெறப்பட்ட அந்நிய நேரடிமுதலீடுகளில் 45 சதவீதமாகும்.

 

நண்பர்களே, தொழில் செய்வதையும் நாங்கள் மிகவும் சிறப்பானதாகமாற்றியுள்ளோம். அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் பரிமாற்றங்களைதகவல் தொழில்நுட்ப அடிப்படையிலேயே மேற்கொள்ள வலியுறுத்திவருகிறோம். அரசின் பலன்களை நேரடியாக பரிமாற்றம் செய்வது உள்ளிட்டடிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடவடிக்கைகள், தற்போது முழுவீச்சில்அமல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக தொழில் தொடங்குவதற்குமிகப்பெரும் வாய்ப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளோம்.தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்குவதற்காக ஏராளமானநிறுவனங்கள் முன்வருகின்றன. எனவே, எங்களுடன் தொழில் செய்வதுமிகப்பெரும் வாய்ப்பு என்பதை என்னால் கூற முடியும்.

 

அந்நிய நேரடி முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ள நாடுகள் குறித்து, வர்த்தகம் மற்றும்மேம்பாட்டுக்கான ஐநா அமைப்பு (UNCTAD)  வெளியிட்டுள்ள பட்டியலில், முதல் 10நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அளவில் குறைந்த செலவில் உற்பத்திசெய்வதற்கான சூழலைக் கொண்டு விளங்குகிறோம். அறிவுப்புலமை மற்றும்சிறந்த திறன்பெற்ற வல்லுநர்களை அதிக அளவில் பெற்றுள்ளோம். உலகத் தரம்வாய்ந்த பொறியியல் கல்வித் தளம் மற்றும் வலுவான ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு வசதிகளை நாங்கள் கொண்டுள்ளோம். மொத்த உள்நாட்டு உற்பத்திஅதிகரிப்பு, நடுத்தர வகுப்பினரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களின்வாங்கும் திறன் ஆகியவை எங்களது மிகப்பெரும் உள்ளூர் சந்தையில்வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தொழில்நிறுவனங்கள் பிரிவில், குறைந்த வரிவிதிப்பு கொண்டுள்ள நாடு என்ற நிலைக்குமுன்னேறியுள்ளோம். புதிய முதலீடுகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்ஆகியவற்றின் மீதான வரியை 30 சதவீதத்திலிருந்து 25%-ஆக குறைத்துள்ளோம்.அறிவுசார் சொத்துரிமை (IPR) விவகாரத்தில், முக்கியத்துவம் வாய்ந்தகொள்கைகளை உருவாக்கியுள்ளோம். தற்போது, அதிவேகக் குறியீடுகளைக்கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளோம். கடனை செலுத்த முடியாமை மற்றும்திவாலாதல் விதிகள் மூலம், நீண்டகால சட்டப் போராட்டம் மற்றும் நிதிப்போராட்டம் மேற்கொள்ளாமலேயே தொழிலிலிருந்து வெளியேற முடிகிறது.

எனவே, தொழிலைத் தொடங்குவதிலிருந்து தொழிலை நடத்துதல் மற்றும் மூடுவதுவரை, புதிய வழிமுறைகள், செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகளைஉருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவை அனைத்தும்,தொழில் செய்வதற்கு மட்டுமன்றி, எங்களது மக்களின் எளிதான வாழ்க்கைக்கும்மிகவும் முக்கியமானது. இளம் நாடாக இருக்க, வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதுடன், சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியம் என்பதைநாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். இவை இரண்டுமே முதலீட்டுடன்தொடர்புடையது. எனவே, அண்மைக்கால ஆண்டுகளில், உற்பத்தி மற்றும்கட்டமைப்பில் இதுவரை இல்லாத வகையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக உற்பத்தியைமேம்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். எங்களது “இந்தியாவில்தயாரிப்போம்” இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு, “டிஜிட்டல் இந்தியா”, “திறன் மிகு இந்தியா” போன்ற திட்டங்கள் சிறந்த முறையில்ஆதரவு அளிக்கின்றன. எங்களது தொழில் துறைக் கட்டமைப்பு, கொள்கைகள்மற்றும் நடைமுறைகளை உலகத்தரத்துக்கு சிறப்பாகக் கொண்டுவருவதிலும்,இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதிலும் கூட கவனம் செலுத்திவருகிறோம்.

தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமையான மேம்பாடு. குறைபாடுகள் இல்லாதமற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத உற்பத்தி. இவையே எங்களதுவாக்குறுதிகள். வானிலை மாற்றத்தின் பாதிப்புகளை குறைப்பதற்கானநடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று உலகத்துக்கு உறுதியளித்துள்ளோம்.எரிசக்தி துறையைப் பொறுத்தவரை, உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைஅதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் 5-வது இடத்தில் நாங்கள் உள்ளோம்.காற்றாலை மின்சார உற்பத்தியில் 4-வது இடத்திலும், சூரியசக்தி மின்உற்பத்தியில்5-வது இடத்திலும் உள்ளோம்.

சாலைகள், துறைமுகங்கள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள்,தொலைத்தொடர்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி உள்ளிட்ட அடுத்ததலைமுறைக்கான கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்க நாங்கள் கவனம்செலுத்தி வருகிறோம். எங்களது மக்களுக்கு சிறந்த வருமானம் மற்றும் தரமானவாழ்க்கை கிடைப்பதற்காக சமூக, தொழில் துறை மற்றும் வேளாண்கட்டமைப்பில் அதிக அளவில் நாங்கள் முதலீடு செய்து வருகிறோம். இதற்கு சிலஉதாரணங்களை குறிப்பிடுகிறேன். கடந்த 4 ஆண்டுகளில், மின்சார உற்பத்திமற்றும் மின்உற்பத்தி கட்டமைப்பை பெருமளவில் அதிகரித்துள்ளோம்.  முதல்முறையாக, மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.மிகப்பெரும் அளவுக்கு எல்இடி பல்புகளை விநியோகித்துள்ளோம். இதன்மூலம்,அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மின்பகிர்மான வழித்தடங்களை அமைத்துள்ளோம். சாலைகளை அமைக்கும் வேகம்,சுமார் இரண்டு மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது. மிகப்பெரும்துறைமுகங்களின் திறனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளோம்.கிராமப்புற சாலை இணைப்பு, தற்போது 90%-ஆக அதிகரித்துள்ளது. புதிய ரயில்வழித்தடங்களை அமைப்பது, பாதையை அகலப்படுத்துவது, இரட்டைவழிப்பாதையாக மாற்றுவது மற்றும் ரயில் பாதைகளை மின்மயமாக்குவதுஆகியவற்றின் வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆன்லைன்நடவடிக்கைகள் மூலமாக, மிகப்பெரும் துறைமுகங்களின் செயல்பாடுகளைதினசரி அடிப்படையில் வேகப்படுத்தி வருகிறோம். கட்டமைப்பில் எங்களதுபொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பு (Public Private Partnership)நடவடிக்கைகள், அதிக அளவில் முதலீட்டுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது.எங்களது அரசின் ஒட்டுமொத்த ஆட்சிக்காலத்தில் சராசரி ஒட்டுமொத்த உள்நாட்டுஉற்பத்தி வளர்ச்சி 7.3%-ஆக உள்ளது. இது 1991-ம் ஆண்டு முதலே, இந்தியாவில்இருந்த அரசுகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் உயர்ந்தபட்சமாகும்.அதேநேரத்தில், பணவீக்க விகிதம் 4.6%-ஆக உள்ளது. இது தாராளமயமாக்கல்நடவடிக்கைகளை இந்தியா தொடங்கிய 1991-ம் ஆண்டு முதல் இருந்த எந்தவொருஇந்திய அரசுகளைவிடவும் மிகவும் குறைவானதாகும்.

வளர்ச்சியின் பலன்கள், மக்களுக்கு எளிதாகவும், சிறப்பாகவும் சென்றுசேரவேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கு உங்களிடம் சில உதாரணங்களை தெரிவிக்கிறேன். தற்போது ஒவ்வொருகுடும்பத்திற்கும் வங்கிக்கணக்கை தொடங்கச் செய்துள்ளோம். சிறுநிறுவனங்களுக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் கடன்களை வழங்கிவருகிறோம். தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம்.பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார இணைப்பு கொடுத்துள்ளோம்.இதுவரை சமையல் எரிவாயு இணைப்பு பெறாமல் இருந்தவர்களில்,பெரும்பாலான மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம். நகர்ப்புறங்கள்மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உரிய முறையில்துப்புரவுப்பணிகள் மேற்கொள்வதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைக்கவும், அதனை உரிய முறையில்பயன்படுத்தச் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மகளிரே மற்றும் ஆடவர்களே,

2017-ம் ஆண்டில், உலக அளவில் அதிவேகமாக வளரும் சுற்றுலாப்பகுதிகளில்ஒன்றாக நாங்கள் இருந்தோம். இந்தியா, 2016-ம் ஆண்டைவிட 14 சதவீதவளர்ச்சியைப் பெற்றது. அதேநேரத்தில், உலக அளவிலான சராசரி வளர்ச்சி 7சதவீதமாக இருந்தது. உலக அளவில் விமானப் போக்குவரத்து சந்தையிலும் கூட,நாங்கள்  வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். 4 ஆண்டுகளில் பயணிகளின்எண்ணிக்கை இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

எனவே, புதிய இந்தியா வளர்ந்து வருகிறது. இது நவீனமானது, போட்டியை எதிர்கொள்ளவல்லது அதோடு அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டது, கருணை நிறைந்தது. இந்த இரக்க குணத்துக்கு உதாரணமாக, நமது மருத்துவக் காப்பீட்டுத்திட்டமான தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்) திகழ்கிறது.இந்தத் திட்டம், 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும். இது அமெரிக்கா, கனடா,மெக்சிகோ ஆகிய நாடுகளின்  கூட்டு மக்கள்தொகையைவிட அதிகமாகும்.ஆயுஷ்மான் பாரத் திட்டம், சுகாதார கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள்உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் துறைகளில் அளப்பரிய முதலீட்டுவாய்ப்புகளை அளிக்கும்.

மேலும் சில உதாரணங்களை பட்டியலிட நான் விரும்புகிறேன். மெட்ரோ ரயில்முறையை கட்டமைக்க இந்தியாவில் உள்ள 50 நகரங்கள் தயார்நிலையில் உள்ளன. 5 கோடி வீடுகளை கட்ட உள்ளோம். சாலை, ரயில் மற்றும் நீர்வழிப் பாதையின்தேவை மிகவும் அதிக அளவில் உள்ளது. அதிவேகமான மற்றும் தூய்மையானபாதைகளை உருவாக்கும் இலக்கை நிறைவேற்ற உலகத்தரம் வாய்ந்ததொழில்நுட்பங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நண்பர்களே, அளப்பரிய வாய்ப்புகளைக் கொண்ட நிலமாக இந்தியா திகழ்கிறது.உங்களுக்கு ஜனநாயகம், புவியமைப்பு மற்றும் தேவையை வழங்கும் ஒரே இடமாகஇந்தியா உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு நான் உறுதிஅளிக்கிறேன். அதாவது, எங்களது ஜனநாயக அமைப்பு, மனித மதிப்புகள் மற்றும்வலுவான நீதித்துறை அமைப்பு ஆகியவை உங்களது முதலீடுகளுக்குபாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் அளிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.முதலீட்டுக்கான சூழலை மேலும் மேம்படுத்தவும், போட்டியை எதிர்கொள்ளும்வகையில் நம்மை மாற்றியமைத்துக் கொள்ளவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறோம்.

இந்தியாவில் இதுவரை வசிக்காதவர்கள் இங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்;  ஊக்குவிக்கிறேன்.முதலீட்டாளர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவதற்கான வழிகளைஉருவாக்கியுள்ளோம். மேற்கண்ட அனைத்துக்கும் மேலாக, உங்களது பயணத்தில்கைகொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்ற உறுதியைஉங்களுக்கு அளிக்கிறேன்.

உங்களுக்கு நன்றி! உங்களுக்கு மிக்க நன்றி.

இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கவும்!  #Cheers4India
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's core sector output in June grows 8.9% year-on-year: Govt

Media Coverage

India's core sector output in June grows 8.9% year-on-year: Govt
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 31, 2021
July 31, 2021
பகிர்ந்து
 
Comments

PM Modi inspires IPS probationers at Sardar Vallabhbhai Patel National Police Academy today

Citizens praise Modi Govt’s resolve to deliver Maximum Governance