“அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலத்தில் தேசத்தின் வளர்ச்சியில் உங்கள் தொகுப்பு முக்கிய பங்கினை வகிக்கும்”
“பெருந்தொற்றுக்குப் பின் உருவாகியிருக்கும் புதிய உலக ஒழுங்கில் இந்தியா தனது பங்கினை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும், அதிவேகத்தில் தாமே முன்னேற வேண்டியுள்ளது”
“உங்களது சேவையின் அனைத்து ஆண்டுகளிலும் சேவையின் அம்சங்களிலும், கடமையிலும் உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வெற்றி அளவிடப்பட வேண்டும்”
“எண்களுக்கு பணிசெய்வதாக நீங்கள் இருக்கக்கூடாது. மக்களின் வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்”
“எளிதான வேலை இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் பிரார்த்திக்கக்கூடாது”
“அமிர்த காலத்தில் நாம் அடுத்த நிலைக்கு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும், மாற்றம் காண வேண்டும். எனவே, இன்றைய இந்தியா ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் முன்னேறுகிறது”
“எளிதான வேலை இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் பிரார்த்திக்கக்கூடாது”
“அதிக வசதியான வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திப்பது உங்களின் முன்னேற்றத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் அதிகம் தடுப்பதாக அமையும்”

அடிப்படை பயிற்சி வகுப்பை நிறைவு செய்யும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இன்று ஹோலிப் பண்டிகை நாளாகும். உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த கல்வி நிறுவனத்தினருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கும், லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் சான்றிதழ்கள் உங்கள் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டதற்கும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய விளையாட்டுக்கள் வளாகமும், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை உங்களின் அணி உணர்வை, சுகாதாரத்தை, உடல் தகுதியை வலுப்படுத்தும். மேலும் குடிமைப்பணி சேவையை மேலும் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

நண்பர்களே,

 கடந்த பல ஆண்டுகளாக குடிமைப்பணி ஊழியர்களின் பல தொகுப்பினரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் அவர்களுடன் செலவிட்டிருக்கிறேன். ஆனால் உங்களின் தொகுப்பு எனது கருத்தின்படி மிகவும் சிறப்புடையதாகும்.  சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவில் நீங்கள் உங்கள் பணியை தொடங்குகிறீர்கள். சுதந்திரத்தின் 100-வது ஆண்டில் இந்தியா நுழையும் போது நம்மில் பலர் இல்லாமல் போகலாம். ஆனால்  நீங்களும் உங்கள் தொகுப்பும் அந்த சமயத்தில் இருப்பீர்கள்.அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலத்தில் தேசத்தின் வளர்ச்சியில் உங்கள் தொகுப்பு முக்கிய பங்கினை வகிக்கும்.

நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டில் உலகம் இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. பெருந்தொற்றுக்குப் பின் புதிய உலக ஒழுங்கு உருவாகி உள்ளது. இந்தப் புதிய உலக ஒழுங்கில் இந்தியா தனது பங்கினை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும், அதிவேகத்தில்
தாமே முன்னேற வேண்டியுள்ளது. ‘21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இலக்கு’ அதாவது தற்சார்பு இந்தியா, நவீன இந்தியா இலக்கு. குறித்து சிறப்பு கவனத்துடன் இந்த காலத்தின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நாம் நழுவ விட முடியாது.

இந்த பயிற்சிக்காலத்தில் குடிமை சேவை குறித்து சர்தார் பட்டேலின் பார்வையையும், கருத்துக்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சேவை மற்றும் கடமை உணர்வு பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். உங்களது சேவையின் அனைத்து ஆண்டுகளிலும் சேவையின்
அம்சங்களிலும், கடமையிலும் உங்களின் தனிப்பட்ட மற்றும்
தொழில் முறை வெற்றி அளவிடப்பட வேண்டும்.

நண்பர்களே,

 கடமை உணர்வோடும், நோக்கத்தோடும் செய்யப்படும் பணி ஒருபோதும் சுமையாக இருப்பதில்லை. நோக்கத்தின் உணர்வோடும் சமூகம் மற்றும் நாட்டின் ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பகுதியாகவும், சேவைக்கு வர வேண்டும்.

கோப்பின் விஷயங்களில் உண்மையான உணர்வு களத்திலிருந்து வருவதால், களத்தின் அனுபவத்தை பின்பற்றுவது அவசியம். கோப்புகளில் இருப்பவை வெறும் எண்களும், புள்ளி விவரங்களும் அல்ல, அவை மக்களின் வாழ்க்கையையும், விருப்பங்களையும் கொண்டுள்ளன. எண்களுக்கு பணி செய்வதாக நீங்கள் இருக்கக்கூடாது. மக்களின் வாழ்க்கைக்காக
இருக்க வேண்டும். பிரச்சினைகளின் மூலகாரணத்தை அதிகாரிகள் காண வேண்டும், அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

நண்பர்களே,

  • காலத்தில் நாம் அடுத்த நிலைக்கு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும், மாற்றம் காண வேண்டும். எனவேஇன்றைய இந்தியா ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் முனனேறுகிறது. கடைகோடியில் இருக்கும் கடைசி மனிதனின் நல்வாழ்வு ஒவ்வொரு முடிவு பற்றிய கணிப்புக்கு உரைகல்லாக இருக்க வேண்டும்.

 அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களின் உள்ளூர் நிலையிலான 5-6 சவால்களை அடையாளம் கண்டு, அதற்காக பாடுபட வேண்டும். சவால்களுக்கு தீர்வு காண்பதில் முதல் படியாக இருப்பது சவால்களை அடையாளம் காண்பதாகும். ஏழைகளுக்கு கல்வீடு கட்டித் தருதல், மின்சார இணைப்பு வழங்குதல் போன்ற சவால்களுக்கு தீர்வு காண பிரதமரின் வீட்டு வசதி திட்டம், சௌபாக்யா திட்டம், முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான திட்டங்கள் போன்றவை அரசால் அடையாளம் காணப்பட்டிருப்பது இதற்கான உதாரணங்களாகும்.

நண்பர்களே,

 குடிமை சேவைகள் தளத்தில் அதாவது கர்மயோகி இயக்கம் மற்றும் ஆரம்ப திட்டத்தில் புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சவால்மிக்க பணி, அதற்கே உரிய மகிழ்ச்சியை தருவதால்,எளிதான வேலை இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஒருபோதும் பிரார்த்திக்கக்கூடாது. அதிக வசதியான வாழ்க்கை
பற்றி நீங்கள் சிந்திப்பது உங்களின் முன்னேற்றத்தையும் நாட்டின்
முன்னேற்றத்தையும் தடுப்பதாக அமையும்.

 இந்த கல்வி நிறுவனத்திலிருந்து புறப்படும் நேரத்தில் தங்களின் விருப்பங்களையும், திட்டங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 25 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவற்றை பார்க்கும் போது சாதனையின் அளவை மதிப்பீடு செய்ய முடியும் . எதிர்கால பிரச்சினைகள் பெருமளவு தரவுகள் அறிவியலை சார்ந்திருப்பதோடு, இந்த தரவுகளை பிரித்தறியும் திறன் தேவைப்படும் என்பதால், பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களும், தரவுகளும் சேர்க்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

புதிய பயிற்றுவிப்பு மற்றும் பாடப்பிரிவுடன் கர்மயோகி இயக்க கோட்பாடுகளின் அடிப்படையில், லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் 96 ஆவது அடிப்படை பாட வகுப்பு என்பது முதலாவது பொதுவான அடிப்படை பாட வகுப்பாகும். இந்த தொகுப்பு 16 சேவைகளிலிருந்து 488 பயிற்சி முடித்தவர்களையும், 3 ராயல் பூட்டான் சேவை செய்பவர்களையும் (நிர்வாகம், காவல்துறை, வனத்துறை) உள்ளடக்கியதாகும்.

இளமை ததும்பும் தொகுப்பின் சாகசம் நிறைந்த மற்றும் புதுமை உணர்வு கொண்ட புதிய பயிற்சி முறை கர்மயோகி இயக்க கோட்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரின் முயற்சி என்ற உணர்வில் பத்ம விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடுதல், கிராமப்புற இந்தியாவின் ஆழமான அனுபவத்திற்காக கிராமங்களுக்கு செல்லுதல் போன்ற முன்முயற்சிகள் மூலம் மாணவர்கள் / குடிமக்கள் பகுதியிலிருந்து மக்கள் சேவைக்கான அதிகாரிகள் பயிற்சியில் மாற்றம் தேவை. தொலைதூர கிராமங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ள பயிற்சி அதிகாரிகள் கிராமங்களுக்கு பயணம் செய்தனர். தொடர்ச்சியான, தரப்படுத்தப்பட்ட கற்றலின் கோட்பாட்டுடன் சுயவழிகாட்டுதல் கொண்ட கற்றலை ஏற்றுக் கொண்ட பாடநூல்களுக்கான அணுகுமுறை தேவைப்படுகிறது. சுகாதார பரிசோதனைகளோடு, உடல் தகுதி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தேர்வு சுமையுள்ள மாணவரை ஆரோக்கியமான குடிமை சேவை இளைஞராக மாற்ற உதவும்.

 நண்பர்களே,

உங்களில் ஒருவராக இருக்கவும், உங்களுடன் நேரத்தை செலவிடவும் நான் விரும்பினேன். ஆனால் நேரம் போதாமை, இதர பிரச்சனைகள் மற்றும் நாடாளுமன்ற கூட்டத் தொடரால் நான் வர இயலவில்லை.ஆனால்  இப்போதும் நான் உங்களை காண முடிகிறது.  தொழில்நுட்பத்திற்கு நன்றி. உங்களின் முகபாவனைகளை நான் படிக்க முடிகிறது. உங்களுடன் எனது எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

 உங்கள் அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Very proud of ancestral roots in Goa': European Council chief Antonio Costa flaunts OCI card—watch

Media Coverage

Very proud of ancestral roots in Goa': European Council chief Antonio Costa flaunts OCI card—watch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit verse emphasising discipline, service and wisdom
January 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam emphasising universal principles of discipline, service, and wisdom as the foundation of Earth’s future:

"सेवाभाव और सत्यनिष्ठा से किए गए कार्य कभी व्यर्थ नहीं जाते। संकल्प, समर्पण और सकारात्मकता से हम अपने साथ-साथ पूरी मानवता का भी भला कर सकते हैं।

सत्यं बृहदृतमुग्रं दीक्षा तपो ब्रह्म यज्ञः पृथिवीं धारयन्ति ।

सा नो भूतस्य भव्यस्य पत्न्युरुं लोकं पृथिवी नः कृणोतु॥"

The Subhashitam conveys that, universal truth, strict discipline, vows of service to all, a life of austerity, and continuous action guided by profound wisdom – these sustain the entire earth. May this earth, which shapes our past and future, grant us vast territories.

The Prime Minister wrote on X;

“सेवाभाव और सत्यनिष्ठा से किए गए कार्य कभी व्यर्थ नहीं जाते। संकल्प, समर्पण और सकारात्मकता से हम अपने साथ-साथ पूरी मानवता का भी भला कर सकते हैं।

सत्यं बृहदृतमुग्रं दीक्षा तपो ब्रह्म यज्ञः पृथिवीं धारयन्ति ।

सा नो भूतस्य भव्यस्य पत्न्युरुं लोकं पृथिवी नः कृणोतु॥"