உக்ரைன் அதிபர் மேன்மைமிகு வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பேசினார்.
உக்ரேனில் தற்போது நிலவி வரும் போர் சூழல் குறித்து பிரதமரிடம் அதிபர் ஜெலென்ஸ்கி விளக்கமாக எடுத்துரைத்தார். நடைபெற்றுவரும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் சொத்துகளின் சேதம் குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்தார். உடனடியாக வன்முறையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு தாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அமைதி முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்குப் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகக் கூறினார்.
உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக் குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். இந்தியர்களை அங்கிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கு உக்ரேனிய அதிகாரிகளின் உதவியை அவர் கோரினார்.


