பூட்டான் பிரதமர் மாண்புமிகு திரு டோப்கேவும் அவரது மனைவியும், அயோத்தியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“அயோத்தியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் பிரதமர் திரு டோப்கேவும், அவரது மனைவியும் சுவாமி தரிசனம் செய்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆற்றலையும், ஊக்கத்தையும் அளிக்கின்றன.”
@tsheringtobgay
@ShriRamTeerth
Wonderful to see PM Tobgay and his wife pray at the Shri Ram Janmabhoomi Mandir in Ayodhya. The ideals of Prabhu Shri Ram give strength and inspiration to millions across the globe.@tsheringtobgay@ShriRamTeerth https://t.co/aaqyFOSnub
— Narendra Modi (@narendramodi) September 6, 2025




