புதுதில்லியில் அண்மையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் காயமடைந்து எல்என்ஜெபி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். காயமடைந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக் குறித்து விசாரித்தார். விரைவில் குணமடைய தாம் மனமார பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர், இதற்கான நீதியை உறுதி செய்வதற்காக அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தச் சதிச் செயலுக்கு காரணமானவர்கள், நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“எல்என்ஜெபி மருத்துவமனைக்குச் சென்று தில்லியில் வெடி விபத்தின் போது காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தச் சதிச் செயலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!”
Went to LNJP Hospital and met those injured during the blast in Delhi. Praying for everyone’s quick recovery.
— Narendra Modi (@narendramodi) November 12, 2025
Those behind the conspiracy will be brought to justice! pic.twitter.com/HfgKs8yeVp


