தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக திரு மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“தில்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ள பின்அதிர்வுகளுக்கும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், அமைதி காக்குமாறும் அனைவரையும் வலியுறுத்துகிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025


