PM to participate in Paschimbanga Divas celebrations in Hooghly on 20 June
PM to launch, dedicate and lay Foundation Stones of various Development Projects across Railways, Agriculture, Rural Development, Fisheries and Animal Husbandry Sectors
PM to kickstart rollout of several key Central Agricultural Schemes in West Bengal
These schemes include Pradhan Mantri Fasal Bima Yojana, Agri Stack, National Mission on Natural Farming and Pradhan Mantri Dhan-Dhaanya Krishi Yojana
PM to release 23rd PM-Kisan Instalment worth ₹18,880 Crore, benefiting over 9.44 Crore Farmers across the Country
PM to commission three indigenously designed and built naval ships – INS Dunagiri, INS Sanshodhak and INS Agray at Syama Prasad Mookerjee Port, Kolkata
Ships have been built with extensive participation by Indian industry, including more than 200 MSMEs
PM to lead 12th International Day of Yoga Celebrations in Kolkata on 21 June
Theme of IDY 2026: “Yoga for Healthy Ageing”

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. "மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி" என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது, பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ரயில்வே, விவசாயம், ஊரக வளர்ச்சி, மீன்வளம்,  கால்நடை பராமரிப்பு ஆகிய திட்டங்கள், மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் நலனை அதிகரிக்கவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவிடும்.

மேலும், 'பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் 23-வது தவணைத் தொகையை பிரதமர் விடுவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9.44 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 18,880 கோடி வரவு வைக்கப்படும்.

அண்மையில் நடைபெற்றத் தேர்தல்கள், புதிய அரசின் பதவியேற்புக்குப் பிறகு மாநிலத்திற்கு முதன்முறையாக அம்மாநிலத்திற்குச் சென்ற  பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார். மேற்கு வங்காள மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. மோடி, இந்நிகழ்வை மாநிலம் முழுவதும் புதிய நம்பிக்கையையும், உறுதியையும், முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக விவரித்தார். "மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சி, நாட்டைக் கட்டமைக்கும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. மக்களிடையே காணப்படும் உற்சாகமும், மாநிலம் முழுவதும் நிலவும் நேர்மறையான சூழலும், பிரகாசமான எதிர்காலம் குறித்த வளர்ந்து வரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன" என்று திரு. மோடி குறிப்பிட்டார்.

தூய்மையே சேவை என்ற முன்முயற்சியில் பங்கேற்ற மக்களைப் பாராட்டிய பிரதமர், தூய்மை என்பது அன்றாட வாழ்வின், நிலையான வளர்ச்சியின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேற்கு வங்க தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு. மோடி, சுதந்திரம், பிரிவினைக்கு முந்தைய பரப்பான காலகட்டத்தில் அம்மாநிலத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரியம், இந்தியாவில் அதன் இடத்தைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்ட தியாகங்களை இந்நிகழ்வு நினைவூட்டுவதாகக் கூறினார். வங்காள மக்களின் நலன்கள், விருப்பங்களைப் பாதுகாக்கப் பாடுபட்ட தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், அறிஞர்கள், பொது ஆளுமைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026