பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 22, 2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்குச் செல்கிறார். மதியம் 12:30 மணியளவில், சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை மெட்ரோ பயணத்தை அவர் மேற்கொள்வார். பிற்பகல் 1 மணியளவில், மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, விழாவில் உரையாற்றுவார்.
82 கி.மீ. நீளமுள்ள டெல்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்தியாவின் முதல் நமோ பாரத் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புமுறையின் மீதமுள்ள பிரிவுகளை அவர் திறந்து வைப்பார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் நமோ பாரத் ரயில், இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புமுறையாகும். இது சாஹிபாபாத், காஜியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை டெல்லியுடன் இணைக்கும்.
இந்த வழித்தடத்தின் தொடக்க நிலையமான சராய் காலே கான், இந்த திறப்பு விழாவுடன் தொடங்கப்படும் நான்கு நமோ பாரத் நிலையங்களில் ஒன்றாகும். இது ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம், டெல்லி மெட்ரோவின் பிங்க் லைன், வீர் ஹக்கீகத் ராய் ஐஎஸ்பிடி மற்றும் ரிங் ரோடு ஆகியவற்றை தடையின்றி இணைக்கும் ஒரு முக்கிய பன்முக மையமாக அமைந்துள்ளது. மேலும் மூன்று நமோ பாரத் நிலையங்களான சதாப்தி நகர், பேகம்புல் மற்றும் மோடிபுரம் ஆகியவை மீரட்டில் இயக்கப்படுகின்றன.
மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் இடையேயான மீரட் மெட்ரோ சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இது நாட்டிலேயே முதன்முறையாக நமோ பாரத் போன்ற உள்கட்டமைப்பில் இயங்குகிறது. மீரட் மெட்ரோ, மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயங்கும் இந்தியாவின் வேகமான மெட்ரோ அமைப்புமுறையாக இருக்கும். நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில்களின் இந்த தடையற்ற ஒருங்கிணைப்பு, அதிவேக நகரங்களுக்கு இடையேயான பயணத்தையும், நகரத்திற்குள் விரைவான இயக்கத்தையும் உறுதி செய்யும். இது இந்தியாவில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மற்றும் பிராந்திய போக்குவரத்திற்கு ஒரு அளவுகோலை அமைக்கும். இது சாலைப் போக்குவரத்தில் நெரிசலைக் குறைப்பதன் மூலம், வாகன கரியமில வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறையும்.
उत्तर प्रदेश समेत देशभर में रेल कनेक्टिविटी के तेज विस्तार के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में कल दोपहर करीब 12:30 बजे मेरठ में देश की सबसे तेज मेरठ मेट्रो और नमो भारत ट्रेन के उद्घाटन का सौभाग्य मिलेगा। इसके बाद नमो भारत रीजनल रैपिड ट्रांजिट सिस्टम के दूसरे खंडों के शुभारंभ के…
— Narendra Modi (@narendramodi) February 21, 2026


