நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்

பிரதமர் திரு  நரேந்திர மோடி நாளை (2024 ஜனவரி 8)  பிற்பகல் 12:30 மணிக்கு நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

 

இந்த யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

 

2023 நவம்பர் 15 அன்று இந்த யாத்திரை தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார்.  யாத்திரை தொடர்பான இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இதுவரை நான்கு முறை  (நவம்பர் 30, டிசம்பர் 9, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 27) காணொலிக் காட்சி மூலம் நடந்துள்ளது. மேலும், பிரதமர் கடந்த மாதம் வாரணாசிக்குச் சென்றபோது தொடர்ந்து இரண்டு நாட்கள் (டிசம்பர் 17-18) நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.

 

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை, அரசின் முக்கியத் திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

2024 ஜனவரி 5,  அன்று, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்தது. அதாவது, இதுவரை இந்த யாத்திரையில் பங்கேற்றவர்களின் மொத்த எண்ணிக்கை ஜனவரி 5-ம் தேதியன்று 10 கோடியைத் தாண்டியது. யாத்திரை தொடங்கப்பட்ட 50 நாட்களுக்குள் இந்த பிரமிக்கத்தக்க எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இது மக்களை ஒருங்கிணைப்பதில் யாத்திரையின் சிறந்த தாக்கத்தையும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு செல்வதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs

Media Coverage

Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 11, 2026
April 11, 2026

PM Modi’s Vision in Overdrive: From Electric Buses to Gaganyaan — India’s Multi-Speed March to Viksit Bharat