இந்தியா-நேபாளம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்
நேபாளப் பிரதமர் திரு பிரசண்டாவின் சமீபத்திய இந்தியப் பயணத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் நேபாளம் முக்கிய பங்கு வகிக்கிறது

நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹல் பிரசண்டாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இந்தியா-நேபாள இருதரப்பு  ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை இரு  தலைவர்களும்  ஆய்வு செய்தனர். மேலும் நேபாளப் பிரதமர் திரு பிரசண்டா, 2023 மே 31 முதல் ஜூன் 3 வரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு  ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர்.

நெருங்கிய மற்றும் நட்புடன் கூடிய அண்டை நாடான நேபாளம், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை பரிமாற்றங்களின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் அமைந்துள்ளது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India Post launches drone delivery pilot across Himachal, Assam

Media Coverage

India Post launches drone delivery pilot across Himachal, Assam
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 22, 2026
August 22, 2026

Citizens Appreciate PM Modi’s Leadership Driving India’s Growth, Innovation and Connectivity