மார்பியில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் மற்றும் இதர அதிகாரிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு திரு மோடி அறிவுறுத்தினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“மார்பியில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் @Bhupendrapbjp மற்றும் இதர அதிகாரிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi கேட்டறிந்தார். நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மீட்புக் குழுவினருக்கு அவர் அறிவுறுத்தினார். நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.”
PM @narendramodi spoke to Gujarat CM @Bhupendrapbjp and other officials regarding the mishap in Morbi. He has sought urgent mobilisation of teams for rescue ops. He has asked that the situation be closely and continuously monitored, and extend all possible help to those affected.
— PMO India (@PMOIndia) October 30, 2022


