பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“நமது நாகரிகத்தின் பெருமைமிக்க அடையாளமான சோம்நாத்திற்கு வந்திருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

1026-ம் ஆண்டில் சோம்நாத் கோவிலின் மீதான முதல் தாக்குதல் நடந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், தேசம் முழுவதும் ஒன்றிணைந்து கொண்டாடும் சோமநாத் சுயமரியாதைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.

 

எனக்கு அளித்த அன்பான வரவேற்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.”

“ஜெய் சோம்நாத்!

 

இன்றைய வரவேற்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது.”

“இன்று மாலை சோம்நாத்தில், ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தேன். கோவில் வளாகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் சோம்நாத் யாத்திரையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்தோம்.”

 

“ॐ हमारे वेदों का, शास्त्रों का, पुराणों का, उपनिषदों और वेदांत का सार है।

ॐ ही ध्यान का मूल है, और योग का आधार है।

ॐ ही साधना में साध्य है।

ॐ ही शब्द ब्रह्म का स्वरूप है।

ॐ से ही हमारे मंत्र प्रारंभ एवं पूर्ण होते हैं।

आज सोमनाथ स्वाभिमान पर्व में 1000 सेकंड्स तक ओंकार नाद के सामूहिक उच्चार का सौभाग्य मिला। उसकी ऊर्जा से अंतर्मन स्पंदित और आनंदित हो रहा है।

ॐ तत् सत्!!”

 

“सोमनाथ स्वाभिमान पर्व के सुअवसर पर सोमनाथ मंदिर परिसर में भव्यता और दिव्यता से भरा ड्रोन शो देखने का सौभाग्य मिला। इस अद्भुत शो में हमारी प्राचीन आस्था के साथ आधुनिक टेक्नोलॉजी का तालमेल हर किसी को मंत्रमुग्ध कर गया। सोमनाथ की पावन धरा से निकला यह प्रकाशपुंज पूरे विश्व को भारत की सांस्कृतिक शक्ति का संदेश दे रहा है।” 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Agriculture Minister renews push for DBT of fertiliser subsidy to farmers

Media Coverage

Agriculture Minister renews push for DBT of fertiliser subsidy to farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
போடோ ஒப்பந்தம் போடோ மக்களுக்கு புதிய விடியலின் தொடக்கமாக அமையும்; அஸ்ஸாமின் ஒற்றுமை & ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்: பிரதமர்
January 30, 2020
Bodo Agreement inspired by the mantra of 'Sabka Saath, Sabka Vikas & Sabka Vishwas' and spirit of 'Ek Bharat-Shresth Bharat' : PM
Development of Bodo areas foremost priority of Government; Work has begun on Rs. 1500 crore development package: PM

அஸ்ஸாம் மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியில், போடோ ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  போடோ  ஒப்பந்தத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்  & அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்’ என்ற மந்திரங்கள் மற்றும் ‘ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம்’ என்ற உணர்வால் ஈர்க்கப்பட்டதே இந்த ஒப்பந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய பாபுவை அவரது நினைவு நாளில் இந்தியா நினைவுகூரும் வேளையில், அஸ்ஸாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைக் கண்டுள்ளது.  50 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, நமது போடோ நண்பர்களுடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் புதிய விடியலின் தொடக்கமாக அமைந்துள்ளது.  இது அஸ்ஸாமின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, வளர்ச்சியை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

போடோ அமைப்புகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, போடோ பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது அரசின் தலையாய முன்னுரிமையாக உள்ளது.  ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. வாழ்க்கையை எளிதாக்கி, அரசுத் திட்டங்கள் மூலம், போடோ மக்கள் முழுமையாக பயனடைவதை உறுதி செய்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

போடோ நண்பர்கள் அமைதிப் பாதையில் நம்முடன் இணைந்திருப்பது, வன்முறைப் பாதையை கைவிட்டு,  ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளது.    போடோ நண்பர்களை தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.  போடோ பகுதிகளின் மேம்பாட்டை உறுதி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த போடோ பிரச்சினைக்கு, மதிப்புக்குரிய பாபுவின் (காந்தியடிகளின்) நினைவு தினமான இன்று தீர்வு ஏற்பட்டுள்ளது.  போடோ குழுக்கள் & அரசு இடையிலான இந்த உடன்படிக்கை, அஸ்ஸாமின் ஒற்றுமை & ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்.  வன்முறைப் பாதையை கைவிட்டு, ஜனநாயகம் & அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைப்பது என்ற எனது போடோ நண்பர்களின் முடிவை நான் வரவேற்கிறேன்.

போடோ நண்பர்களுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை, அஸ்ஸாம் மற்றும் நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட  பிற மாநிலங்களுக்கும் ஒரு பாடமாகும்.  வன்முறை மற்றும் அச்சமற்ற சூழல் இருந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க முடியும்.  போடோ நண்பர்களின் ஒட்டுமொத்த ஆற்றலும், அஸ்ஸாமின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்பது மகிழ்ச்சிக்குரியது.