மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் கடினமான பாதைகளைக் கூட எளிமையாக்கும் சக்திகள் என்று குறிப்பிடும் சமஸ்கிரு சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். தற்போது நமது இளைஞர்கள் இந்த மனஉறுதியுடன் நாட்டைக் கட்டமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஒரு இலக்கை ஆழ்ந்து சிந்தித்து உறுதியான தீர்மானத்துடன் தொடங்கி, அதை விடாமல் நிறைவு செய்பவர், நேரத்தை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துபவர், தமது புலன்களை முழுமையாக கட்டுப்படுத்துபவரே உண்மையான ஞானியாவார்.”
दृढ़ निश्चय और आत्म-संयम वह शक्ति है, जो कठिन से कठिन राह को भी आसान बना देती है। आज हमारे युवा साथी इसी संकल्प के साथ राष्ट्र निर्माण में निरंतर जुटे हुए हैं।
— Narendra Modi (@narendramodi) June 2, 2026
निश्चित्य यः प्रक्रमते
नान्तर्वसति कर्मणः।
अबन्ध्यकालो वश्यात्मा
स वै पण्डित उच्यते॥ pic.twitter.com/OboLRs7j9b


