உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் அவர் பாராட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டையும், நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதையும் இந்த நாள் மறு உறுதி செய்வதாக பிரதமர் கூறியுள்ளார். கடந்த தசாப்தத்தில் அரசின் எண்ணற்ற முன்முயற்சிகளை எடுத்துரைத்துள்ள அவர், இதன் மூலம் பசுமைப் பரப்பு விரிவடைந்திருப்பதாகவும் பல வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டான முயற்சிகள், வலுவான கொள்கைகள், அறிவியலில் நம்பிக்கை, புத்தாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் என்பதை இந்திய மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அதன் பல்லுயிர் பெருக்கத்தில் பெருமிதம் கொள்வதாகவும் இது பன்முக சூழல் அமைப்புகள் மூலம் எண்ணற்ற உயிரிங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் உதவியாக இருக்கின்றன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் நல்வாழ்த்துகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நமது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதித் தன்மையையும் நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதையும் இந்த நாள் மறு உறுதி செய்கிறது. கடந்த தசாப்தத்தில் எங்கள் அரசு இந்த திசை வழியில் மேற்கொண்ட எண்ணற்ற முயற்சிகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. பசுமைப் பரப்பு விரிவாக்கம், வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றில் இந்தியா முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது. கூட்டான முயற்சிகளும் கொள்கைகளும் அறிவியல் நம்பிக்கை, புத்தாக்கம் என்பவையும் நமது சுற்றுச்சூழலை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை இந்திய மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.”
Best wishes to everyone on World Environment Day. I would like to applaud all those passionate about environmental conservation. This is a day to reaffirm our commitment to protecting our environment and furthering growth that is sustainable. Numerous efforts by our Government…
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
“நமது பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியர்களாக நாம் பெருமிதம் கொள்ளலாம். நமது பன்முகச் சூழல் அமைப்புகள் எண்ணற்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் ஆதரவாக உள்ளன. சிறப்பு மீட்டுருவாக்கத்தில் நமது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. அன்னப்பறவை, பனிச்சிறுத்தைகள், தேன்கரடிகள், சிறுத்தைகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் நீடித்த உறுதிப்பாடு, வன உயிரினங்களையும் சூழல் அமைப்புகளையும் மீட்க எவ்வாறு உதவி செய்துள்ளன என்பதற்கான சான்றினைத் தருகின்றன. ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்பது போன்ற முன்முயற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.19 லட்சம் ஹெக்டேரில் வன உருவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றன.’
We in India are very proud of our biological diversity. Our diverse ecosystems support countless species and livelihoods. Our efforts in special recovery have also been noteworthy. Conservation efforts for the Great Indian Bustard, snow leopards, sloth bears and Cheetahs have…
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை (லைஃப்) இயக்கத்தின் மூலம் நாங்கள் தூய்மையான, பசுமையான அதிகம் நீடிக்கத்தக்க புவிக்கோளினை நோக்கி தொடர்ந்து பணியாற்றுகிறோம்.”
Guided by the principle of ‘One Earth, One Family and One Future’, we will continue working towards a cleaner, greener and more sustainable planet through the spirit of Mission LiFE. pic.twitter.com/SRj4Tr5swT
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
“प्रकृति का संरक्षण केवल एक दायित्व नहीं, बल्कि हमारी संस्कृति और संस्कारों का भी अभिन्न हिस्सा है।
मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः।
माध्वीर्नः सन्त्वोषधीः॥"
May the air flow pleasantly and beneficially around us, may the rivers provide life-giving and nourishing water, and may herbs and plants bring health and well-being to all living beings.
प्रकृति का संरक्षण केवल एक दायित्व नहीं, बल्कि हमारी संस्कृति और संस्कारों का भी अभिन्न हिस्सा है।
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः।
माध्वीर्नः सन्त्वोषधीः॥ pic.twitter.com/dFqtF4hSWu


