Prime Minister urges citizens to change social media display pictures as a mark of respect for armed forces

ஆபரேஷன் சிந்துரின் ஓராண்டு நிறைவையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முப்படைகளின் துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதிப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.

பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தத் துணிந்தவர்களுக்கு ஆயுதப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் 'ஆபரேஷன் சிந்தூர்' பிரதிபலித்ததாக திரு மோடி கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை, ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன், தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த வலிமையை எடுத்துக்காட்டியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவதாகவும், பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான இந்தியாவின் தேடல் தேசிய பாதுகாப்பிற்குக் கொண்டு வந்துள்ள வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடிப்பதிலும், அதற்குத் துணைபோகும் சூழலை அழிப்பதிலும் இந்தியா தனது உறுதியில் அசைக்கமுடியாமல் உள்ளது என்று திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின்போது, ​​இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆயுதப் படைகள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தி, உறுதியான பதிலடி கொடுத்தன என்று திரு மோடி கூறினார். ஒவ்வொரு இந்தியரும் ஆயுதப் படைகள் குறித்துப் பெருமை கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின்போது ஆயுதப் படைகள் வெற்றி பெற்றதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில், தாம் பகிர்ந்த படத்தைக் காட்சிப் படமாக (டிபி-ஆக) மாற்றுமாறு குடிமக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"ஓராண்டுக்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நமது ஆயுதப் படைகள் ஈடு இணையற்ற துணிச்சலையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தின. பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். நமது படையினரின் வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் வணக்கம் செலுத்துகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது. அது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன், தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த வலிமையையும் எடுத்துக்காட்டியது. அதே நேரத்தில், அது நமது படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியதுடன், பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான இந்தியாவின் தேடல் நமது தேசியப் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்துள்ள வலிமையையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இன்று, ஓராண்டுக்குப் பிறகும், பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான எங்கள் உறுதியில் முன்பைப் போலவே உறுதியாக இருக்கிறோம்.”

ஓராண்டுக்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ​​நமது ஆயுதப் படைகள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி, நம் மக்களைத் தாக்கியவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தன. ஒவ்வொரு இந்தியரும் நமது ஆயுதப் படைகளைக் குறித்துப் பெருமை கொள்கிறார்கள். நமது படைகளுக்கும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அவர்கள் அடைந்த வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, நாம் அனைவரும் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நமது காட்சிப் படங்களை (டிபி-களை)  கீழே பகிரப்பட்டுள்ள படத்திற்கு மாற்றுவோம்.

 

“A year ago, during #OperationSindoor, our armed forces showcased their valour and gave a firm response to those who attacked our people. Every Indian is proud of our armed forces. As a mark of respect to our forces and their success during #OperationSindoor, let us all change our display pictures on social media, including X, Facebook, Instagram and WhatsApp to the picture shared below.” 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt

Media Coverage

EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President
August 08, 2026
PM and Vice President Vance review progress in the India-U.S. Strategic Partnership.
PM and Vice President Vance exchange views on regional and global developments.
PM warmly congratulates Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son.

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.

Prime Minister and Vice President Vance reviewed progress in the India-U.S. Comprehensive Global Strategic Partnership. They noted the sustained momentum in the high-level engagements and reaffirmed their commitment to further strengthening cooperation in trade, defence, critical and emerging technologies, energy security and critical minerals.

They also exchanged views on regional and global developments of mutual interest.

Prime Minister warmly congratulated Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son and conveyed best wishes to the family.