பூடானின் திம்புவில் நான்காம் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று வரவேற்றார். 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிறந்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக இந்திய அரசு மற்றும் மக்களின் வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இந்தியா – பூடான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் தலைமைத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக 4-ம் மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பரம் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பகிரப்பட்ட ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்புகள் இருநாட்டு மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

திம்புவில் உலகளாவிய அமைதிப் பிரார்த்தனை திருவிழாவின் ஒரு பகுதியாக சாங்லிமிதாங் மைதானத்தில் நடைபெற்ற காலச்சக்ரா நிகழ்ச்சியில் பூடான் மன்னர், பூடானின் நான்காம் மன்னர் மற்றும் அந்நாட்டு பிரதமருடன் திரு மோடி கலந்து கொண்டார். பூடானின் தலைமை மடாதிபதி திரு ஜெ கென்போ தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
Had a wonderful meeting with His Majesty the Fourth Druk Gyalpo. Appreciated his extensive efforts over the years towards further cementing India-Bhutan ties. Discussed cooperation in energy, trade, technology and connectivity. Lauded the progress in the Gelephu Mindfulness City… pic.twitter.com/It8O8TTYbi
— Narendra Modi (@narendramodi) November 12, 2025
མི་དབང་ མངའ་དང་རྒྱལཔོ་ འབྲུག་རྒྱལ་བཞི་པ་དང་གཅིག་ཁར་ ཞལ་འཛོམས་ལེགས་ཤོམ་ཅིག་འཚོགས་ཡི།ལོ་ངོ་མང་རབས་ཅིག་གི་རིང་ལུ་ རྒྱ་གར་དང་ འབྲུག་གི་བར་ན་ མཐུན་ལམ་སྒྲིང་སྒྲི་བཟོ་ནི་ལུ་ ཁོ་གིས་ བརྩོན་ཤུགས་སྦོམ་བསྐྱེདཔ་ད་ བསྟན་རྒྱས་བློན་པོ་ལུ་ བཀའ་དྲིན་ཆེ་ཟེར་ཞུ་ཡི། ནུས་ཤུགས་དང་ ཚོང་འབྲེལ་དང་… pic.twitter.com/UInjzuaRBQ
— Narendra Modi (@narendramodi) November 12, 2025


