உலக அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு சான்றாக க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு மோடி, கூறியிருப்பதாவது:
“க்யூஎஸ் உலக பல்கலைக்கழகம் 2026 தரவரிசை, நாட்டின் கல்வித் துறையின் சிறந்த செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இளைஞர்கள் இடையே ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.”
The QS World University 2026 Rankings bring great news for our education sector. Our Government is committed to furthering research and innovation ecosystems for the benefit of India’s youth. https://t.co/wO11jvnr0J
— Narendra Modi (@narendramodi) June 19, 2025


