உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சூரத் நகரில், மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
இயற்கையை பசுமையை, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கான உறுதிமொழியை ஒன்றிணைந்து மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்' இயக்கத்தின் கீழ், சூரத் நகரில், மரக்கன்று ஒன்றை நடும் வாய்ப்பைப் பெற்றேன். வாருங்கள், இயற்கையை பசுமையாகவும், எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கவும், அனைவரும் ஒன்றிணைந்து நமது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துவோம்."
विश्व पर्यावरण दिवस पर सूरत में 'एक पेड़ मां के नाम' अभियान के तहत वृक्षारोपण का सौभाग्य मिला। आइए, हम सब मिलकर प्रकृति को हरा-भरा बनाने और आने वाली पीढ़ियों के लिए इसके संरक्षण का संकल्प दोहराएं। pic.twitter.com/KJjAvcmZaY
— Narendra Modi (@narendramodi) June 5, 2026


