தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும், எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார் என்று பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும் சமூகநீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக அவர் திகழ்ந்தார் என்று திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடனான தமது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் அவரது வாழ்க்கை மற்றும் பணி தொடர்பாக குறிப்பிட்ட அம்சங்களை திரு மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூகஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“ஜெயலலிதா அவர்களை அவரது  பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.

அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது  இங்கு இடம் பெற்றுள்ளது.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indonesia To Dubai, IITs And IIMs Are Going Global: The Strategy Behind India's Overseas Campuses

Media Coverage

Indonesia To Dubai, IITs And IIMs Are Going Global: The Strategy Behind India's Overseas Campuses
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 9, 2026
July 09, 2026

PM Modi Leading India's Economic, Cultural & Diplomatic Renaissance