பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பீகார் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மக்கள் தலைவராக அவர் தமது வாழ்க்கை முழுவதையும் சமூக நீதிக்காக அர்ப்பணித்து அந்த திசையில் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
बिहार के पूर्व मुख्यमंत्री भारत रत्न कर्पूरी ठाकुर जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। जननायक ने अपना संपूर्ण जीवन सामाजिक न्याय के लिए समर्पित कर दिया और इस दिशा में अनेक प्रयास किए। उनका जीवन और आदर्श देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) January 24, 2025


