காலாட்படை தினத்தையொட்டி காலாட்படையின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“காலாட்படை தினத்தன்று, நமது காலாட்படைகளின் உறுதியான துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் போற்றுகிறோம். நம் தேசத்தைப் பாதுகாப்பதில் வீரர்களின் உறுதிப்பாடு, வலிமை மற்றும் தியாகத்தின் வழிகாட்டியாக விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும் வகையில், துணிச்சல் மற்றும் சேவையின் உயர்ந்த கொள்கைகளை ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்துகிறார்.
@adgpi”
On Infantry Day, we honour the unwavering bravery and dedication of the Infantry. Their commitment to safeguarding our nation stands as a beacon of strength and sacrifice. Each soldier embodies the highest ideals of valour and service, inspiring every Indian.@adgpi pic.twitter.com/TAMjFxBrWf
— Narendra Modi (@narendramodi) October 27, 2025


