முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் நரசிம்ம ராவ் ஆற்றிய முக்கிய பங்கைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பி.வி. நரசிம்ம ராவ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். நமது வளர்ச்சிப் பாதையின் ஒரு முக்கியமான கட்டத்தில் அவரது திறமையான தலைமைக்கு இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அவரது அறிவுத்திறன், ஞானம், ஆளுமைத் தன்மை ஆகியவை பரவலாகப் போற்றப்படுகின்றன.”
Remembering Shri PV Narasimha Rao Garu on his birth anniversary. India is grateful to him for his effective leadership during a crucial phase of our development trajectory. His intellect, wisdom and scholarly nature are also widely admired.
— Narendra Modi (@narendramodi) June 28, 2025


