மாமனிதர் பாலாசாகேப் தாக்கரேயின் பிறந்த நாள் நூற்றாண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் சமூக அரசியல் களத்தை பெருமளவு வடிவமைத்த உயர்ந்த மனிதர் என்று பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
தமது கூர்மையான அறிவுத்திறன், ஆற்றல்மிக்க பேச்சு, சமரசமற்ற கொள்கைகள் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்ட பாலாசாகேப் தாக்கரே தனித்துவமான ஆளுமையால் மக்களுடன் இணைந்திருந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அரசியலுக்கு அப்பால், கலாச்சாரம், இலக்கியம், இதழியல் ஆகியவை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர் பாலாசாகேப் தாக்கரே என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கேலிச்சித்திரக்காரராக பாலாசாகேபின் தொழில் முறை வாழ்க்கை சமூகம் சார்ந்த கூர்மையான கவனிப்பை பிரதிபலித்தது என்பதையும் பல வகையான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி கருத்து தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முன்னேற்றம் குறித்த பாலாசாகேப் தாக்கரேயின் தொலைநோக்குப் பார்வையால் தாம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள பிரதமர், அந்த பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எப்போதும் தொடரும் என்று உறுதிபட தெவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“மாமனிதர் பாலாசாகேப் தாக்கரேயின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி மகாராஷ்டிராவின் சமூக அரசியல் களத்தை பெருமளவு வடிவமைத்த அந்த உயர்ந்த மனிதருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.
தமது கூர்மையான அறிவுத்திறன், ஆற்றல்மிக்க பேச்சு, சமரசமற்ற கொள்கைகள் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்ட பாலாசாகேப் தாக்கரே தனித்துவமான ஆளுமையால் மக்களுடன் இணைந்திருந்தார்.
அரசியலுக்கு அப்பால், கலாச்சாரம், இலக்கியம், இதழியல் ஆகியவை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பாலாசாகேப் தாக்கரே. ஒரு கேலிச்சித்திரக்காரராக பாலாசாகேபின் தொழில் முறை வாழ்க்கை சமூகம் சார்ந்த கூர்மையான கவனிப்பை பிரதிபலித்தது. பல வகையான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி அவர் கருத்து தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் முன்னேற்றம் குறித்த பாலாசாகேப் தாக்கரேயின் தொலைநோக்குப் பார்வையால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம். அந்தப் பார்வையை நிறைவேற்ற எப்போதும் பாடுபடுவோம்.”
On the birth centenary of the great Balasaheb Thackeray, we pay tribute to a towering figure who profoundly shaped Maharashtra’s socio-political landscape.
— Narendra Modi (@narendramodi) January 23, 2026
Known for his sharp intellect, powerful oratory and uncompromising convictions, Balasaheb commanded a unique connect with… pic.twitter.com/Gneeh5E9AP
महाराष्ट्राच्या सामाजिक-राजकीय परिदृश्यावर खोलवर प्रभाव टाकणारे
— Narendra Modi (@narendramodi) January 23, 2026
दिवंगत मा. बाळासाहेब ठाकरे यांच्या जन्मशताब्दीनिमित्त, या दिग्गज व्यक्तिमत्त्वाला भावपूर्ण आदरांजली.
तीक्ष्ण बुद्धिमत्ता, प्रभावी वक्तृत्व आणि ठाम विचारसरणीसाठी ओळखले जाणारे बाळासाहेब जनतेशी एक अद्वितीय नाते जपून… pic.twitter.com/3KFuZ8WPEk


