பிரதமர் திரு நரேந்திர மோடி , இன்று 'போசிஷே போய்சாக்' எனும் சிறப்பு நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச்  செலுத்தியுள்ளார்.

குருதேவ் தாகூர் , மிகச்சிறந்த அறிவுத்திறன் கொண்ட ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் கவிஞர் மட்டுமல்லாமல்; ஒரு தலைசிறந்த தத்துவஞானி, கல்வியாளர், கலைஞர் மற்றும் இந்தியாவின் நாகரிக ஆன்மாவின் காலத்தால் அழியாத குரலாகவும் முத்திரை பதித்தவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதகுலத்தின் ஆழமான உணர்வுகளுக்கும், இந்தியப் பண்பாட்டின் உன்னதமான விழுமியங்களுக்கும் குருதேவ் தாகூர்  வடிவம் கொடுத்தார் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான ஆற்றல் மற்றும் பண்பாட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு குருதேவ் சமூகத்தை வளப்படுத்தினார் என்றும் அவர் கூறியுள்ளார்.

குருதேவ் தாகூரை தேசம் ஆழ்ந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார். குருதேவின் சிந்தனைகள் தொடர்ந்து மக்களின் மனங்களை ஒளிரச் செய்து, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது   சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்  பின்வருமாறு கூறியுள்ளார்:

“இன்று, 'போசிஷே போய்சாக்' எனும் சிறப்பு நன்னாளையொட்டி, நாம் குருதேவ் தாகூருக்கு நமது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்துகிறோம்.

குருதேவ் தாகூர் அவர்கள், மிகச்சிறந்த அறிவுத்திறன் கொண்ட ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் ஒரு தலைசிறந்த தத்துவஞானி, கல்வியாளர், கலைஞர் மற்றும் இந்தியாவின் நாகரிக ஆன்மாவின் காலத்தால் அழியாத குரலாகவும் முத்திரை பதித்துள்ளார். மனிதகுலத்தின் ஆழமான உணர்வுகளுக்கும், நமது பண்பாட்டின் உன்னதமான விழுமியங்களுக்கும் அவர் வடிவம் கொடுத்தார். புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான ஆற்றல், பண்பாட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு அவர் நமது சமூகத்தை வளப்படுத்தினார்.

நாம் அவரை ஆழ்ந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறோம். அவரது சிந்தனைகள் தொடர்ந்து மக்களின் மனங்களை ஒளிரச் செய்து, நமது முயற்சிகளுக்கு வழிகாட்டட்டும்.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian coffee exports reach 140 countries in FY2025–26

Media Coverage

Indian coffee exports reach 140 countries in FY2025–26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07, 2026

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்