பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர்  திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

பிரதமர் தமது உரையில், இந்தியா-ஜப்பான் உலகளாவிய கூட்டாண்மையின் வெற்றியை, குறிப்பாக முதலீடு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்டினார்.  இந்தியாவில் தங்கள் தடத்தை மேலும் மேம்படுத்த ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்திய வளர்ச்சிக் கதை அவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய கொந்தளிப்பான உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் நம்பகமான நண்பர்களிடையே ஆழமான பொருளாதாரக் கூட்டாண்மை மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை முன்னறிவிப்பு, சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பு, வணிகம் செய்வதற்கான எளிதான முயற்சிகள் ஆகியவை இந்தியச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன என்று பிரதமர் வலியுறுத்தினார்,  இந்தியா மீதான, உலகளாவிய நிறுவனங்களின்  சமீபத்திய தர மதிப்பீடு இதற்கு சான்றாக உள்ளது என அவர் கூறினார்.

 

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான அதிநவீன தொழில்நுட்பங்கள், உற்பத்தி, முதலீடுகள் மற்றும் மனிதவள பரிமாற்றங்களில் ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைச் சுட்டிக்காட்டிய பிரதமர், உலக வளர்ச்சிக்கு இந்தியா சுமார் 18% பங்களிப்பதாகவும், சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போவதாகவும் கூறினார். இரண்டு பொருளாதாரங்களின் நிரப்புத்தன்மைகளைக் கருத்தில் கொண்டு, மேக் இன் இந்தியா மற்றும் பிற முயற்சிகளை நோக்கி ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான அதிக வணிக ஒத்துழைப்புக்கான ஐந்து முக்கிய பகுதிகளை அவர் விளக்கினார்.   உற்பத்தி - பேட்டரிகள், ரோபாட்டிக்ஸ், செமி கண்டக்டர்கள், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி மற்றும் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஒத்துழைப்பு;  பசுமை ஆற்றல் மாற்றம்;  இயக்கம், அதிவேக ரயில் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு; திறன் மேம்பாடு மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

பிரதமர் இஷிபா, தமது உரையில், இந்திய திறமையாளர்களுக்கும் ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கும் இடையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் ஜப்பானிய நிறுவனங்களின் ஆர்வத்தைக் குறிப்பிட்டார். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான மூன்று முன்னுரிமைகளை அவர் விளக்கினார். பி2பி கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், தொழில்நுட்பத்தின் இணைவு, பசுமை முயற்சிகள், சந்தை, உயர் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தினார்.

 

12-வது இந்தியா- ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின்  அறிக்கையை அதன் இணைத் தலைவர்கள் இரு தலைவர்களுக்கும் வழங்கினர். இந்திய மற்றும் ஜப்பானிய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மைகளை எடுத்துரைத்த ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. நோரிஹிகோ இஷிகுரோ, எஃகு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, கல்வி மற்றும் திறன்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் மனிதவள பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட பல்வேறு பி2பி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அறிவித்தார்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India sees 21% decline in tuberculosis incidence, double of global pace: WHO

Media Coverage

India sees 21% decline in tuberculosis incidence, double of global pace: WHO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 12, 2025
November 12, 2025

Bonds Beyond Borders: Modi's Bhutan Boost and India's Global Welfare Legacy Under PM Modi