இந்தியா நடத்திவரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, கஜகஸ்தான் குடியரசின் பிரதமர் மேதகு திரு ஓல்ஜாஸ் பெக்டெனோவை இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

 

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பிரதமர் திரு பெக்டெனோவின் பங்கேற்பைப் பாராட்டிய திரு நரேந்திர மோடி, சமூக நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிபாட்டை இது எடுத்துரைப்பதாகக் கூறினார். அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, இணைப்பு, எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தலைவர்கள் ஆய்வு செய்தனர்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:

 

“முன்னதாக இன்று பிரதமர் ஓல்ஜாஸ் பெக்டெனோவை சந்தித்துப் பேசினேன். அவரது வருகை, இந்திய-கஜகஸ்தான் உத்திசார் கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்தும். வர்த்தகம், எரிசக்தி, முக்கிய தாதுக்கள், அரிய வகை கனிமங்கள், பாதுகாப்பு, இணைப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. எங்கள் நட்புறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

 

@PrimeMinisterEn”

 

 

“Бүгін ертерек Премьер-министр Олжас Бектенов мырзамен кездестім. Оның сапары Үндістан мен Қазақстан арасындағы стратегиялық серіктестікті одан әрі тереңдете түседі. Сауда, энергетика, маңызды минералдар, сирек жер элементтері, қорғаныс, көлік-логистика байланысы және ғарыш салаларында екіжақты ынтымақтастықты дамытуға зор мүмкіндік бар. Достығымызды жаңа белестерге көтеру үшін бірлесіп жұмыс істеуді жалғастырамыз.

@PrimeMinisterEn”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India

Media Coverage

Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 05, 2026
August 05, 2026

Viksit Bharat in Action: Inclusive, Green, and Globally Competitive Under PM Modi