கஜகஸ்தான் குடியரசு, கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான் குடியரசு, துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைக் கூட்டாகச் சந்தித்தனர்.
புது தில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4வது இந்தியா-மத்திய ஆசிய உரையாடல் கூட்டத்தின் போது நடைபெற்ற நேர்மறையான மற்றும் பயனுள்ள விவாதங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதமரிடம் விளக்கினர்.
மத்திய ஆசிய நாடுகளுடனான உறவுகள் எப்போதும் இந்தியாவிற்கு முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகின்றன என்று பிரதமர் கூறினார். நமது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களுக்கிடையிலான உறவுகளின் வலுவான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டு, அதிக பொருளாதார தொடர்புகள், விரிவாக்கப்பட்ட இணைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பு மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் விரிவான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டு அமைச்சர்களுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
இந்திய-மத்திய ஆசிய கூட்டாண்மை, பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஒரு பலமாக செயல்படுகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
22 ஏப்ரல் 2025 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை மத்திய ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் கடுமையாகக் கண்டித்தனர். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது இந்திய-மத்திய ஆசிய உச்சிமாநாட்டிற்கு அனைத்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Delighted to meet with the Foreign Ministers of Kazakhstan, Kyrgyz Republic, Tajikistan, Turkmenistan and Uzbekistan. India deeply cherishes its historical ties with the countries of Central Asia. Look forward to working together to further deepen our cooperation in trade,… pic.twitter.com/UmzPnF3BI8
— Narendra Modi (@narendramodi) June 6, 2025


