பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்
“தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்படுகிறது”
“இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர்”
“குறித்த நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றும் பணிக் கலாச்சாரத்தை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை, குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன”
“ முழு அரசின் அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுத்தப்படுகிறது”
“அதிவிரைவு சக்தி திட்டம் முழுமையான ஆளுகையின் நீட்டிப்பு”

பிரதமரின் அதிவிரைவுத் திட்டம்  பன்முனை இணைப்புக்கான  தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கினார்.   பிரகதி மைதானத்தில்  புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.  மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி. திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சர்பானந்த சோனாவால்,  திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஆர் கே சிங், மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள்,  மாநில அமைச்சர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  தொழில்துறையிலிருந்து ஆதித்ய பிர்லா குழுமத்தலைவர் திரு குமாரமங்கலம் பிர்லா, டிராக்டர்ஸ் & ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ் தலைமை நிர்வாக இயக்குநர் திருமிகு மல்லிகா சீனிவாசன், டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு டி வி நரேந்திரன், சிஐஐஏ தலைவர் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் துணை நிர்வாகி திரு தீபக் கார்க் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று சக்தியை வழிபடும் மங்களகரமான அஷ்டமி நாள். இந்த மங்களகரமான தருணத்தில், நாட்டின் முன்னேற்றத்தின் வேகமும் புதிய சக்தியைப் பெறுகிறது என்றார்.  தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது. பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம்,  தற்சார்பு இந்தியா வாக்குறுதிக்கான இந்தியாவின் நம்பிக்கையை பெறும். இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர் என பிரதமர் வலியுறுத்தினார்.  21ம் நூற்றாண்டு இந்தியாவை உருவாக்க  இந்த அதிவிரைவு சக்தித் திட்டம் தற்போதைய, எதிர்கால தலைமுறைக்கு  புதிய சக்தியை அளிக்கும் மற்றும் அவர்களின் பாதையில் உள்ள தடைகளை அகற்றும் எனப் பிரதமர் கூறினார்..

பல ஆண்டுகளாக “வேலை நடைபெறுகிறது“ என்பது அவநம்பிக்கையின் அடையாளமாக மாறிவிட்டது என பிரதமர் கூறினார்.   முன்னேற்றத்திற்கு வேகம், ஆர்வம், மற்றும் ஒட்டுமொத்த முயற்சிகள் தேவை. இன்றைய 21ம் நூற்றாண்டு இந்தியா பழைய நடைமுறைகளை  பின்னுக்கு தள்ளுகிறது.  என அவர் கூறினார்.

“தற்போதைய மந்திரம்-

“முன்னேற்றத்திற்கான பணி –

“முன்னேற்றத்திற்கான வளம் –

“முன்னேற்றத்திற்கான திட்டம் –

“முன்னேற்றத்திற்கான முன்னுரிமை.

குறித்த நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றும் பணிக் கலாச்சாரத்தை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை, குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன” என அவர்  கூறினார்.

நம் நாட்டில் உள்கட்டமைப்பு விஷயத்திற்கு பல அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிப்பதில்லை என பிரதமர் வேதனையுடன் கூறினார்.  அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் கூட இது காணப்படுவதில்லை.  நாட்டின் அவசிய உள்கட்டமைப்புகளை  சில அரசியல் கட்சிகள், விமர்சிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

நீடித்த வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல பொருளாதார நடவடிக்கைகளுக்கு இது ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என பிரதமர் குறிப்பிட்டார். 

பெரிய திட்டம் மற்றும் சிறிய அமலாக்கத்திற்கு இடையே உள்ள   இடைவெளி காரணமாக ஒருங்கிணைப்புக் குறைபாடு, மேம்பட்ட தகவல், சிந்தனை குறைபாடு மற்றும் மந்த கதியிலான வேலை போன்ற பிரச்சினைகள் கட்டுமானங்களுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன மற்றும் நிதியும் வீணாகிறது என்று பிரதமர் கூறினார்.  சக்தி அதிகரிப்பதற்குப் பதிலாக பிரிக்கப்படுகிறது என அவர் கூறினார். இப்பிரச்சினைக்கு பிரதமரின்  அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் தீர்வு காணும் என பிரதமர் தெரிவித்தார்.  

கடந்த 2014ஆம் ஆண்டு  பிரதமராக பதவி ஏற்ற போது கிடப்பிலிருந்த நூற்றுக்கணக்கானத் திட்டங்களை ஆய்வு  செய்ததையும் அவற்றுக்கான தடைகளை அகற்ற அனைத்துத் திட்டங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக தாமதங்களை தவிர்ப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். முழு அரசு அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்

இதன் காரணமாக பல தசாப்தங்களாக  நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர் கூறினார்.

பிரதமரின் அதிவிரைவு சக்தி பெருந்திட்டம், அரசின் நடைமுறைகளை பலதரப்பினருடன் ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் பலவகையான போக்குவரத்தையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. இதுதான் முழுமையான ஆளுகையின் நீட்டிப்பு என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களின் வேகத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பிரதமர் விவரித்தார். மாநிலங்களுக்கு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கடந்த 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என அவர் கூறினார். அதன் பின்பு 2014ம் ஆண்டு வரை 27 ஆண்டுகளாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. தற்போது 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெறுகிறது, இந்தப் பணி அடுத்தஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் ஆயிரத்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே  ரயில்பாதைகள் இரட்டிப்பாக்கும் பணி நடைபெற்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு ரயில் பாதைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என பிரதமர் கூறினார்

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் மூவாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் 24 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமான ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன என திரு நரேந்திர  மோடி தெரிவித்தார்.   2014ஆம் ஆண்டுக்கு முன்பாக சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன என பிரதமர் தெரிவித்தார். இன்று மெட்ரோ ரயில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ வழித்தடப் பணி நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் 60 பஞ்சாயத்துக்களில் மட்டுமே கண்ணாடி இழை கேபிள் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏழாண்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களை கண்ணாடி இழை கேபிளுடன் இணைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.        

நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க பதப்படுத்தும் தொழில் தொடர்பான உள்கட்டமைப்புகளும் விரைவாக விரிவுப்படுத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டில் நாட்டில்  இரண்டு மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. இன்று  19 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் செயல்படுகின்றன.  தற்போது இதை 40-க்கும் மேற்பட்டதாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2014ம் ஆண்டில் ஐந்து நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவில் 15 நீர்வழிப் போக்குவரத்துகள் செயல்படுகின்றன.  கடந்த 2014ஆம் ஆண்டில் துறைமுகங்களில் கப்பல் வந்து செல்லும் நேரம் 41 மணி நேரத்திலிருந்து 27 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு என்ற வாக்குறுதியை நாடு உணர்ந்துள்ளது  என அவர் கூறினார். இந்தியாவில் தற்போது 4.25 லட்சம் சுற்று கிலோமீட்டர் மின்பகிர்மான வழித்தடங்கள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டில்இது 3 லட்சம் சுற்று கிலோமீட்டராக இருந்தது. 

தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம்  வர்த்தகத் தலைநகராக மாறும் கனவை இந்தியா அடையும் என பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.  நமது இலக்குகள் அசாதாரணமானவை மற்றும் இதற்கு அசாதாரணமான முயற்சிகள் தேவை என்று  பிரதமர் கூறினார். இந்த இலக்குகளை அடைய பிரதமரின் அதிவிரைவு சக்தித் திட்டம் மிக உதவிகரமாக இருக்கும்.  அரசின் உதவிகளைப் பெறுவதில் தன்ஜன், ஆதார் , செல்போன் ஆகிய மூன்றும் புரட்சியை ஏற்படுத்தியது போல்  பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டமும் உள்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet clears extension of fortified rice scheme until December 2028 to combat anaemia

Media Coverage

Cabinet clears extension of fortified rice scheme until December 2028 to combat anaemia
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi prays to Goddess Mahagouri on eighth day of Navratri
October 10, 2024

The Prime Minister, Shri Narendra Modi has prayed to Goddess Mahagouri on the eighth day of Navratri.

The Prime Minister posted on X:

“नवरात्रि में मां महागौरी का चरण-वंदन! देवी मां की कृपा से उनके सभी भक्तों के जीवन में संपन्नता और प्रसन्नता बनी रहे, इसी कामना के साथ उनकी यह स्तुति...”