உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் நாட்டின் 100-வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராம்சர் தளங்களின் 100 என்பதை எட்டியிருப்பது குறித்து  பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று (05.06.2026) மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த சதுப்பு நிலம் பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு வளமானவை என்பதால் ஏராளமான புலம்பெயர் பறவைகளையும் அங்கேயே தங்கியிருக்கும் பறவைகளையும் ஈர்த்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.  பாராட்டத்தக்க இந்த சாதனை, இந்தியா தனது இயற்கைச் சூழல்களைக் குறிப்பாக அதன் முக்கியமான சதுப்பு நிலங்களை பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளதை பிரதிபலிக்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.  

மகத்தான சமூகப் பங்கேற்பு, அறிவியல், புத்தாக்கம், தீவிர விழிப்புணர்வு முன்முயற்சிகள் மூலம் கடந்த பல ஆண்டுகளாக சதுப்பு நிலங்களை பாதுகாத்து புனரமைக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வலுப்பெற்றுள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார். பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பது,  வரும் தலைமுறைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவற்றில் இந்த கூட்டான முன்முயற்சிகள் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ராம்சர் தளங்களைப் பொருத்தவரை 100 என்பதை அடைந்துள்ளது!

உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் 100-வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சதுப்பு நிலம் பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு வளமானவை என்பதால் ஏராளமான புலம்பெயர் பறவைகளையும் அங்கேயே தங்கியிருக்கும் பறவைகளையும் ஈர்த்துள்ளது.

இந்த சாதனை, இயற்கைச் சூழல்களைக் குறிப்பாக அதன் முக்கியமான சதுப்பு நிலங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மகத்தான சமூகப் பங்கேற்பு, அறிவியல், புத்தாக்கம், தீவிர விழிப்புணர்வு முன்முயற்சிகள் மூலம் கடந்த பல ஆண்டுகளாக சதுப்பு நிலங்களை பாதுகாத்து புனரமைக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வலுப்பெற்றுள்ளன. இந்த முயற்சிகள் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும்  சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும்,  வரும் தலைமுறைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவி செய்துள்ளன.” 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 20, 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines