ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணியின் போது மீதமாகும் பொருட்களை மேம்படுத்துவதற்கான ஆலை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார். இது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் உறுதியான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிநவீன சுத்திகரிப்பு ஆலை, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, எரிசக்தி சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
“இந்த அதிநவீன ஆலை, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இதன் மூலம் எரிசக்தித் துறையில் நாடு தற்சார்பு நிலையை அடையும்."
This state-of-the-art facility adds momentum to our efforts towards boosting energy security, thus becoming Aatmanirbhar in this sector. @HardeepSPuri https://t.co/RtUCMHPkD4
— Narendra Modi (@narendramodi) January 6, 2026


