யூரியா மற்றும் நானோ யூரியா இரண்டையும் பயன்படுத்துமாறும் மற்ற உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர்

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகளும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

102 ஆண்டுகள் பழமையான ஆந்திராவைச் சேர்ந்த கூட்டுறவுக் குழுமத்தின் உறுப்பினர் திரு சயீத் குவாஜா முய்ஹுதீன் பேசுகையில், தற்போதைய அரசின் நடவடிக்கைகளால் தான் நபார்டு வங்கி வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாய் கடன் வழங்க முன்வந்ததாக பிரதமரிடம் தெரிவித்தார். இதனால் தங்களது கூட்டுறவுக் குழுவினர் ஐந்து சேமிப்புக் கிடங்குகளை கட்ட முடிந்ததாக அவர் கூறினார். தானியங்களை சேமிப்பில் வைத்துள்ள விவசாயிகள் மின்னணு சேமிப்புக் கிடங்கிலிருந்து  ரசீதுகளைப் பெறுவதாகவும், இதனால் அவர்கள் வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன்களைப் பெற முடிவதாகவும் அவர் தெரிவித்தார். பன்னோக்கு வசதி மையம் விவசாயிகளை மின்னணு மண்டிகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவற்றுடன் இணைப்பதாக அவர் கூறினார். இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உறுதி செய்கிறது என்றும் இதன் மூலம் இடைத்தரகர் தலையீடுகள்  முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தங்களது குழுவில் பெண் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் உட்பட 5600 பேர் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டுறவுக் குழுவை நடத்தி வரும் உள்ளூர் விவசாயிகளின் முயற்சிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகள் மூலம் வேளாண் உள்கட்டமைப்பு நிதி வழங்கப்படுவது குறித்து உள்ளூர் விவசாயிகள் அறிந்து கொண்டதாகவும், சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பாதுகாத்து வைத்திருந்து  சிறந்த விலைக்கு விற்க சேமிப்புக் கிடங்கு திட்டம் உதவியதாகவும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் உண்மையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன என்று அவர் கூறினார். கிசான் கடன் அட்டைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் மதிப்புக் கூட்டுதல் சேவைகளையும் திரு சையீது குவாஜா வழங்கி வருகிறார்.

இயற்கை விவசாயம் குறித்து பேசிய பிரதமர், நானோ யூரியாவை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரங்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். விவசாயிகளிடையே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், உரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த மண் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பிரதமர் கூறினார்.  "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்க என்ற உணர்வோடு அரசு செயல்படும்போது, திட்டங்கள் கடைசி நபரையும் சென்றடைவதாக பிரதமர் தெரிவித்தார். பயன்கள்  ஒரு சிலருக்கு விடுபட்டு இருந்தால் கூட அவர்களுக்கும் 'மோடியின் உத்தரவாத வாகனம் அரசு திட்டங்களின் பயன்களை வழங்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rooftop solar, KUSUM account for 40% of Indias solar capacity additions in FY27 till July: Bernstein

Media Coverage

Rooftop solar, KUSUM account for 40% of Indias solar capacity additions in FY27 till July: Bernstein
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மை பாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கல்லூரிகளில் இளைஞர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின் மையத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை வைத்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான, விளையாட்டுத் திறனுள்ள ஒரு தேசத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய கேலோ இந்தியா கலந்துரையாடல், விளையாட்டு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தன்னார்வத் தொண்டு, உடற்தகுதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். இது, நாட்டின் விளையாட்டு லட்சியங்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு நேரடி வழியை வழங்குவதோடு, இந்தியாவின் இளைஞர்களின் விளையாட்டுச் சூழல் அமைப்பு குறித்த தொடர் உரையாடலில் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இடம்பெறுவதையும் உறுதி செய்யும்.

தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளம் பங்கேற்பாளர்கள், மை பாரத் தன்னார்வலர்கள், உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்கள் நடைபெறும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், முன்னணி இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றவர்களுக்கும் இடையேயான நேரடிக் கலந்துரையாடல் இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மைய அம்சமாக யுவ சம்வாத் எனப்படும் இளையோர் உரையாடல் இருக்கும். இதில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த யோசனைகள், கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுவார்கள். இந்த உரையாடல் கீழ்க்கண்ட ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும்:

* மேம்பட்ட வசதிகள், பயிற்சி, விளையாட்டு அறிவியல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலை மேம்படுத்துதல்;

* அறிவியல் பூர்வமாக திறமை கண்டறிதல், வெளிப்படையான தேர்வு, நீண்டகால விளையாட்டு வீரர் நலன் ஆகியவற்றின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையாளர்களை வளர்த்தெடுத்தல்;

* மை பாரத் தலைமையிலான தன்னார்வத் தொண்டு மூலம் இளைஞர் தலைவர்களை உருவாக்குதல்;

* சமூக உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், கட்டமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களுக்கு வலுவூட்டுதல்;

* போதைப்பொருள் அற்ற இளைஞர் இயக்கத்தை ஊக்குவித்தல்.