பகிர்ந்து
 
Comments

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தேசிய தலைநகரில் 71-வது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 1,730-க்கும் மேற்பட்ட பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் இன்று தமது இல்லத்தில் கலந்துரையாடினார்.

     உற்சாகத்துடன் கலந்து கொண்ட ஏராளமானவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், குடியரசு தின அணிவகுப்பில் சிறிய இந்தியாவை அவர்கள் எடுத்துக்காட்டுவார்கள் எனக் கூறினார். அணிவகுப்பின் போது, அவர்களது திறமையின் மூலம் இந்தியாவின் சாராம்சத்தை உலகம் காணும் எனக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவை வெறும் புவியியல் அல்லது மக்கள் தொகையால் மதிப்பிட முடியாது என்று கூறினார்.

     இந்தியா என்பது, ஒரே சிந்தனை, பல்வேறு சித்தாந்தங்களின் சங்கமம், உலக மற்றும் பிரபஞ்ச ரீதியிலான செழுமை நிறைந்த உருவகம் ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கை முறையாகும் என்று அவர் கூறினார். “இந்தியா என்றால், ஒரே உலக குடும்பம் என்பதாகவும், அனைத்து மதங்களையும் ஒன்றுபோல கருதுவதாகவும், வாய்மையின் வெற்றியாகவும், ஒரு உண்மையை பல்வேறு வழிகளில் புரிந்து கொள்வதை அனுமதிப்பதாகவும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது அன்பு செலுத்தி பாதுகாப்பதாகவும் தன்னிறைவு, தியாகம் செய்தவர்கள் பேரின்ப நிலையில் இருப்பதாகவும், அனைவரது நலத்தின்மீதும் நம்பிக்கை கொண்டதாகவும், பெண்களை வணங்குவதாகவும், தங்கத்தைவிட தாய்நாடு சிறந்தது என்ற பொருளைக் கொண்டதாகும்” என்று அவர் கூறினார். புவியியல் மற்றும் சமுதாயக் கட்டமைப்பில் கொண்டுள்ள பன்முகத் தன்மையே இந்தியாவின் வலிமை என்று பிரதமர் கூறினார். இந்தியாவை மலர் மாலையுடன் ஒப்பிட்ட அவர், பல்வேறு மலர்களை ஒன்றாக இணைத்து இந்தியர்கள் என்ற பொது நூலில் கட்டப்பட்ட மாலை என்று வர்ணித்தார். “இந்தியா சீரான வழியைவிட, ஒற்றுமையை நம்புகிறது” என அவர் தெரிவித்தார். “ஒற்றுமை என்னும் நூலை வலுப்படுத்தவும்,  அதனை பாதுகாக்கவும் தொடர் முயற்சியும், உழைப்பும் அவசியம்” என்று திரு. மோடி கூறினார். புதிய இந்தியாவின் முன்னேற்றம் பற்றி குறிப்பிட்ட அவர், இதில் எவரும், எந்த மதமும் விடுபடாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். அடிப்படை கடமைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நமது அடிப்படை கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார். “நாம் நமது கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றினால், நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய தேவை இருக்காது” என்று அவர் கூறினார்.

     பிரதமர் திரு.மோடி, பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.   

 

 

Click here to read PM's speech

‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Padma Awards Under Modi Govt: Honouring Different Leaders From Across The Spectrum

Media Coverage

Padma Awards Under Modi Govt: Honouring Different Leaders From Across The Spectrum
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...