பகிர்ந்து
 
Comments
PM Modi appreciates the crucial role of the pharma sector in the fight against the pandemic
It is because of the efforts of the pharma industry that today India is identified as ‘pharmacy of world’: PM Modi
Despite all the challenges, the Indian pharma industry has also registered a growth of 18 percent in exports last year, which shows its potential: PM

மருந்து உற்பத்தி தொழில்  தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருந்து உற்பத்தி துறையின் முக்கிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றி வரும் மருந்து உற்பத்தி தொழில் துறையை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.

மருந்து உற்பத்தி தொழில்களின் முயற்சிகளால் தான் உலகின் மருந்தகமாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்றின் போது அத்தியாவசிய மருந்துகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்ப முடிந்தது என்றும்  அவர் கூறினார்.

அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், 18 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் எட்டி தனது திறமையை இந்திய மருந்து உற்பத்தி துறை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

வைரசின் இரண்டாம் அலை மற்றும் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரித்ததற்காக மருந்துகள் துறையை பாராட்டினார். ரெம்டெசிவிர் போன்ற ஊசி மருந்துகளின் விலையை குறைத்ததற்காக நிறுவனங்களை அவர் பாராட்டினார்.

மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மருந்துகள் துறையை அவர் கேட்டுக்கொண்டார். இவற்றின் போக்குவரத்துக்கு அரசின் ஆதரவு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

கொவிட் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறும் மருந்துகள் துறையை பிரதமர் கேட்டுக்கொண்டார். வைரசை கட்டுப்படுத்த இது உதவும் என்று அவர் கூறினார்.

மருந்துகள் துறையின் ஒத்துழைப்பை கோரிய பிரதமர் திரு மோடி, புதிய மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அரசு செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் உதவி மற்றும் ஆதரவை மருந்து உற்பத்தி தொழில் தலைவர்கள் பாராட்டினர். மருந்துகள் உற்பத்தி மற்றும் போக்குவரத்திற்கு கடந்த ஒரு வருடத்தில் செய்யப்பட்ட முயற்சிகளை அவர்கள் எடுத்துரைத்தனர். மருந்து உற்பத்தி மையங்களில் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் இதர சேவைகள் அதிகபட்ச அளவில் நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட் சிகிச்சை நடைமுறையால் சில மருந்துகளுக்கு ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவு தேவைக்கு மத்தியிலும், நாட்டின் ஒட்டுமொத்த மருந்துகள் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன், சுகாதார இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை  இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால், அமைச்சரவை செயலாளர், மத்திய சுகாதார செயலாளர், மத்திய மருந்துகள் செயலாளர், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் இதர அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
During tough times, PM Modi acts as 'Sankatmochak', stands by people in times of need

Media Coverage

During tough times, PM Modi acts as 'Sankatmochak', stands by people in times of need
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Shri Narendra Modi's remarks at G7 Summit on Building Back Together - Open Societies & Economies
June 13, 2021
பகிர்ந்து
 
Comments

On the second day of the Outreach Sessions of the G7 Summit, Prime Minister Shri Narendra Modi took part in two sessions titled ‘Building Back Together—Open Societies and Economies’ and ‘Building Back Greener: Climate and Nature’.

Invited to speak as a Lead Speaker in the session on Open Societies, PM recalled that democracy and freedom were a part of India’s civilizations ethos. He shared the concern expressed by several Leaders that open societies are particularly vulnerable to disinformation and cyber-attacks, and stressed the need to ensure that cyberspace remains an avenue for advancing democratic values and not of subverting it. Hihglighting the non-democratic and unequal nature of global governance institutions, PM called for the reform of the multilateral system as the best signal of commitment to the cause of Open Societies. The leaders adopted the ‘Open Societies Statement’ at the end of the meeting.

In the session on climate change, PM highlighted that the planet's atmosphere, biodiversity and oceans can not be protected by countries acting in silos, and called for collective action on climate change. Speaking about India's unwavering commitment to climate action, he mentioned the commitment by Indian Railways to achieve Net Zero Emissions by 2030. He stressed that India is the only G-20 country on track to meet its Paris commitments. He also took note of the increasing effectiveness of the two major global initiatives nurtured by India i.e. the CDRI and the International Solar Alliance. Prime Minister stressed that developing countries need better access to climate finance, and called for a holistic approach towards climate change that covers all dimensions of the problem- mitigation, adaptation, technology transfer, climate financing, equity, climate justice and lifestyle change.

Prime Minister's message of global solidarity and unity, especially between open and democratic societies and economies, in tackling the global challenges of health, climate change and economic recovery was well received by the Leaders at the Summit.