இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2025-26-ல் 7.7% ஆகவும், நிதியாண்டு 2025-26-ன் நான்காவது காலாண்டில் 7.8% ஆகவும் பதிவானதை சுட்டிக்காட்டிய பிரதமர், இவை, பொருளாதாரத்தின் இயல்பான வலிமையையும், சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவும், எளிதாக வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்தவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக உள்ளது! ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதியாண்டு 2025-26-ல் 7.7% ஆகவும், நிதியாண்டு 2025-26-ன் நான்காவது காலாண்டில் 7.8% ஆகவும் பதிவானது, பொருளாதாரத்தின் இயல்பான வலிமையையும், சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது.
எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவும், எளிதாக வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கவும் நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.”
India’s growth momentum remains strong!
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
GDP growth rate of 7.7% in FY 2025-26 and 7.8% in Q4 of FY 2025-26 reflect the inherent strength of our economy, the success of reforms and the hard work of 140 crore Indians.
We shall leave no stone unturned to further ‘Ease of Living,’…


