குஜராத் புத்தாண்டு தினத்தையொட்டி அனைத்து குஜராத் மக்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு அனைவரது வாழ்க்கையிலும் ஒளியேற்றி முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் என்று அவர் வாழ்த்தியுள்ளார். குஜராத் எப்பொழுதும் சாதனைகளின் புதிய உயரத்தை அடையட்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
"அனைத்து குஜராத் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!
இன்றிலிருந்து தொடங்கும் புத்தாண்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றி உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.... புதிய தீர்மானங்கள், புதிய உத்வேகங்கள் மற்றும் புதிய இலக்குகளுடன், குஜராத் எப்போதும் சாதனைகளின் உச்சத்தில் உயரும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
સૌ ગુજરાતીઓને નવા વર્ષની અંતઃકરણપૂર્વકની શુભેચ્છાઓ…!!
— Narendra Modi (@narendramodi) October 26, 2022
આજથી શરૂ થતુ નવું વર્ષ આપના જીવનને પ્રકાશમય કરી પ્રગતિના પંથે દોરી જાય….નવા સંકલ્પો, નવી પ્રેરણાઓ તથા નવા લક્ષ્યો સાથે ગુજરાત હરહંમેશ સિદ્ધિના ઉચ્ચ સોપાનો સર કરે તેવી અભિલાષા સાથે નૂતન વર્ષાભિનંદન...


