2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பதக்கங்களை வென்ற வீரர்களைப் பாராட்டியுள்ளார். 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளின் பிரம்மாண்டமான வெற்றியைக் குறிப்பிட்டு, விளையாட்டு உள்கட்டமைப்பு, வீரர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டதாகவும்,  மறுசுழற்சி, நெகிழி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் உள்ளிட்டவை அடங்கிய நிலைத்தன்மையில் கவனம் செலுத்தியதற்காகவும் இந்த விளையாட்டுப் போட்டிகள் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். குஜராத் மாநில மக்கள் மற்றும் அரசின் விருந்தோம்பலை அவர் பாராட்டினார்.

தொடர் ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:

“2022 தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. இதில் கலந்துகொண்டு விளையாட்டு உணர்வை மேம்படுத்திய ஒவ்வொரு வீரருக்கும் வணக்கம்.  போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்களது சாதனையால் பெருமிதம் கொள்கிறேன். வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துகள்.”

“இந்த ஆண்டின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு காரணங்களால் சிறப்பம்சம் பெறுகிறது. விளையாட்டு உள்கட்டமைப்பை வீரர்கள் பரவலாகப் பாராட்டினார்கள். பாரம்பரிய விளையாட்டுகளில் அதிகரித்த வீரர்களின் பங்கேற்பும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.”

“மறுசுழற்சி, நெகிழி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் உள்ளிட்டவை அடங்கிய நிலைத்தன்மையில் கவனம் செலுத்தியதற்காகவும் 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகள் என்றும் நினைவுகூரப்படும். விளையாட்டுகளின் வாயிலான குஜராத் மாநில மக்கள் மற்றும் அரசின் விருந்தோம்பலையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Twelve years of transformation: How India built new infrastructure, digital & strategic capability

Media Coverage

Twelve years of transformation: How India built new infrastructure, digital & strategic capability
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting the power of collective resolve and unity in driving societal progress
August 17, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the importance of collective resolve and unity of minds in driving national progress and societal well-being.

The Prime Minister wrote on X;

"सामूहिक संकल्प और एकता की शक्ति से ही देश आगे बढ़ता है। यही भावना भारत की प्रगति और समृद्धि की मजबूत नींव है।

समानी व आकूतिः समाना हृदयानि वः।

समानमस्तु वो मनो यथा वः सुसहासति॥"

All our resolves should be identical, our minds should be connected with the feeling of unity, so that we may all continually strive for the progress of society through mutual cooperation and equal treatment.