பிரதமர் திரு நரேந்திர மோடி, ராம் சுதார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராம் சுதார்  ஒரு அற்புதமான  சிற்பி என்றும், அவரது கைவண்ணம், கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும் என்றும், அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட, இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கிய, ஒரு அற்புதமான சிற்பியான ராம் சுதாரின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும். அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian coffee exports reach 140 countries in FY2025–26

Media Coverage

Indian coffee exports reach 140 countries in FY2025–26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07, 2026

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்