ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூற்றியுள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ₹2 லட்சம் கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும்".
Pained by the loss of lives in the explosion at a factory in Kakinada district of Andhra Pradesh. I extend my condolences to those who lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) February 28, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased.…
ఆంధ్రప్రదేశ్, కాకినాడ జిల్లాలోని కర్మాగారంలో ప్రమాదవశాత్తు జరిగిన పేలుడులో ప్రాణనష్టం సంభవించడం చాలా బాధాకరం. ఈ క్లిష్ట సమయంలో బాధిత ప్రజలు మరియు వారి కుటుంబాలకు నా ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తూ, గాయపడినవారు త్వరగా కోలుకోవాలని ప్రార్థిస్తున్నాను.
— PMO India (@PMOIndia) February 28, 2026
ప్రమాదంలో మరణించిన వారి…


