ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விபத்து குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” என்று திரு. மோடி கூறியுள்ளார்.
பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது;
“ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விபத்து துயரமானது, மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் யாவும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்-பிரதமர் நரேந்திர மோடி ”
The mishap at a school in Jhalawar, Rajasthan, is tragic and deeply saddening. My thoughts are with the affected students and their families in this difficult hour. Praying for the speedy recovery of the injured. Authorities are providing all possible assistance to those…
— PMO India (@PMOIndia) July 25, 2025


