செயிண்ட்-கோபேன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெனாய்ட் பாசின் உடனான கலந்துரையாடல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றத்தை சந்தித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் செயிண்ட்-கோபேன் நிறுவனத்தின் தடத்தை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் புத்தாக்கம், சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் இதர துறைகளில் கூட்டாளராகச் செயல்படுவதற்கான வழிகள் பற்றி ஆலோசித்ததாக திரு மோடி கூறினார்.
உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான கட்டுமானத் தீர்வுகளை உருவாக்குவதற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையும் அதன் பரந்த அளவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“செயிண்ட்-கோபேன் நிறுவனத்தைச் சேர்ந்த திரு பெனாய்ட் பாஸின் உடன் உரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தைக் கண்டு வருகிறது. இந்தியாவில் செயிண்ட்-கோபேன் நிறுவனத்தின் தடத்தை மேலும் விரிவுபடுத்துவது, புத்தாக்கம், சுழற்சிப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கூட்டாளராகச் செயல்படுவது குறித்து விவாதித்தோம். இந்தியாவின் பன்முகத்தன்மையும் பரந்த அளவும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான கட்டுமானத் தீர்வுகளை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன.
@saintgobain”
Glad to interact with Mr. Benoit Bazin of Saint-Gobain. India is witnessing an unprecedented transformation in infrastructure and urban development. Discussed ways to further expand Saint-Gobain’s footprint in India and partner in innovation, circular economy and more. India’s… pic.twitter.com/yDSiUKX6D0
— Narendra Modi (@narendramodi) June 18, 2026


