அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திருமதி கமலா ஹாரிஸ்–க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“திருமதி கமலா ஹாரிஸ்–க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது வெற்றி புதிய வரலாறு படைக்கும், உங்களது சித்திகளுக்கு மட்டுமல்லாது, அனைத்து இந்திய– அமெரிக்கர்களுக்கும் மட்டற்ற பெருமையைத் தருகிறது. உங்கள் ஆதரவு மற்றும் தலைமையில் இந்திய– அமெரிக்க நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020


