காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுதிருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் பாரா விளையாட்டுக்களுக்கு சுதிரின் பதக்கம் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. உயரிய தங்கப் பதக்கத்தை வென்று தமது உறுதித் தன்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். களத்தில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். பாராட்டுகளோடு, அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துகள்.”
A great start to the CWG 2022 para-sports medal count by Sudhir! He wins a prestigious Gold and shows yet again his dedication and determination. He has been consistently performing well on the field. Congratulations and best wishes to him for all upcoming endeavours. pic.twitter.com/6V2mXZsEma
— Narendra Modi (@narendramodi) August 5, 2022


