பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திர முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசி, முதலமைச்சராக 15 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

திரு சந்திர பாபு நாயுடுவின் எதிர்கால தொலைநோக்குப் பார்வையையும் நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பையும் பிரதமர் பாராட்டினார். இந்த நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் மாறாமல் உள்ளது என அவர் கூறினார். 2000-வது ஆண்டுகளின் முற்பகுதியில் இருவரும் முதலமைச்சர்களாகப் பணியாற்றியபோது, திரு சந்திரபாபு நாயுடுவுடனான தமது நீண்ட தொடர்பை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பைப் பிரதமர் பாராட்டினார்.

ஆந்திரப் பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்கும் நலனுக்கும் திரு என். சந்திரபாபு நாயுடு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதற்கு பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"திரு சந்திரபாபு நாயுடுவுடன் பேசி, முதலமைச்சராக 15 ஆண்டுகளை அவர் நிறைவு செய்ததற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவரது எதிர்கால தொலைநோக்குப் பார்வையும், நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பும் அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கிறது. 2000-வது ஆண்டுகளின் முற்பகுதியில் நாங்கள் இருவரும் முதலமைச்சர்களாக இருந்த காலத்திலிருந்து, பல சந்தர்ப்பங்களில் திரு சந்திரபாபு நாயுடுவுடன் நான் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். ஆந்திரப் பிரதேசத்தின் நலனுக்காக அவர் மிகுந்த ஆர்வத்துடன் பாடுபடுவதற்காக அவருக்குப் பாராட்டுகள். @ncbn”.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From school to PG, girls now outnumber boys

Media Coverage

From school to PG, girls now outnumber boys
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 1, 2026
May 01, 2026

From Stolen Treasures to Smart Trains: PM Modi’s Blueprint for a Proud, Connected, Self-Reliant India