எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெற்ற பிரதமர் திரு.அபிய் அகமது அலி மற்றும் அவரது   கட்சிக்கு (ப்ராஸ்பெரிட்டி கட்சி) பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

எத்தியோப்பியாவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆழமான வேரூன்றிய உறவுகளை இந்தியா மிகவும் மதிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு தான் எத்தியோப்பியா சென்றிருந்ததை நினைவு கூர்ந்த அவர், இந்தியா-எத்தியோப்பியா இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தவும் பிரதமர் அபிய் அகமது அலியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி 'எக்ஸ்'  தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

 

"எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தீர்மானிக்கத்தக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர், பிரதமர் அபிய் அகமது அலி மற்றும் ப்ராஸ்பெரிட்டி கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

எத்தியோப்பியாவுடனான நமது வரலாற்றுச் சிறப்புமிக்க, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆழமான வேரூன்றிய உறவுகளை இந்தியா பெரிதும் மதிக்கிறது. கடந்த ஆண்டு நான் எத்தியோப்பியா சென்றிருந்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறேன். நமது உத்திசார்ந்த கூட்டாண்மை யையும், நமது மக்களுக்கிடையிலான நட்புறவையும் மேலும் வலுப்படுத்த நாம் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region

Media Coverage

Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 07, 2026
August 07, 2026

Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch