ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதல்-எஃப் 55 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முத்துராஜாவின் வலிமையும், உறுதியும் இந்தியாவின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆண்களுக்கான குண்டு எறிதல்-எஃப் 55 போட்டியில் வெண்கலம் வென்ற முத்துராஜாவுக்கு வாழ்த்துகள். அவரது வலிமையும் உறுதியும் இந்தியாவின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த வழிவகுத்துள்ளது. அவரது இந்த வெற்றி, மற்றவர்கள் தங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாமல் சிறந்து முன்னேறுவதற்கு ஊக்கமளிக்கட்டும்."
Congratulations to Muthuraja for his remarkable Bronze in Men's Shot Put-F55 event. His strength and determination have led to showcasing of India's talent on the global stage. May this victory motivate others pursue excellence and never give up on their dreams. pic.twitter.com/Sl2lRg6YJl
— Narendra Modi (@narendramodi) October 26, 2023


