ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எல்.3-எஸ்.யு.5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் மந்தீப் கௌருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் முன்மாதிரியான ஒருங்கிணைப்பு மற்றும் உறுதியையும் அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எல்.3-எஸ்.யூ 5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் மந்தீப் கௌருக்கு வாழ்த்துகள்.
இவர்கள் முன்மாதிரியான ஒருங்கிணைப்பையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளனர்."
Kudos to Manisha Ramadass and Mandeep Kaur for clinching the Bronze Medal in the Women's Doubles Badminton SL3-SU5 event.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
They have showcased exemplary coordination and determination. pic.twitter.com/vPjeosAyyj


