தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில், பொது சேவைக்கு அரசி தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியமைக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மரபு உலகம் முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;
"தாய்லாந்து ராஜமாதா அரசி சிரிகிட் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். அவர் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பொதுச்சேவை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த கடினமான துக்க நேரத்தில் மன்னர், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தாய்லாந்து மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்."
I am deeply saddened by the passing of Her Majesty Queen Sirikit, The Queen Mother of Thailand. Her lifelong dedication to public service will continue to inspire generations. My heartfelt condolences to His Majesty The King, the members of the Royal Family and the people of…
— Narendra Modi (@narendramodi) October 26, 2025


